Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 16th August 2017

TNPSC Current Affairs 2017
16.08.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
 1. அணு ஆயுதம் மற்றும் அணு ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா மீது .நா சபை கடும் பொருளாதார தடையை விதித்தது. இதன் காரணமாக வடகொரியாவிலிருந்து இரும்பு மற்றும் இரும்பு தாது இறக்குமதி செய்வதை இன்று முதல் சீனா தடை செய்துள்ளது.
 2. லண்டனின் மிகப் பிரபலமான பிக் பென் கடிகாரம் கடந்த 157 ஆண்டுகளாக மணி ஓசையை ஒலித்து கொண்டே இருந்தது. கோபுரத்தில் மிக முக்கியமான பழுது நீக்கும் பணி நடைபெறுவதால் 2021ம் ஆண்டு வரை இம்மணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 3. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா - போலியா இல்லாத நாடு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
 4. பாகிஸ்தானில், தெற்கு ஆசியாவிலே மிக உயரமான 400 அடி கம்பத்தில் கொடி(120 அடி நீளமும் 180 அடி அகலமும்) ஏற்றப்பட்டு; (14.08.2017) சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
 5. அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 3 சீக்கியர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
 6. கத்தாரில் ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
7.     இனவாத வன்முறைக்கும் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் சமூகத்தில் இடமளிக்கக் கூடாது என .நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.
8.     அமெரிக்கத் தொழில்நுட்பங்களைத் திருடியது, நியாயமற்; வர்த்தகத்தில் ஈடுபட்டது குறித்து சீனாவுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
9.     நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆகஸ்ட் 15 நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நேபாளத்துக்கான தூதர் மஞ்சீவ் சிங் பூரி தேசியக்கொடி ஏற்றினார்.
10.  இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை காரணமாக ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் எல்லையில் பதட்டமும் பரபரபப்பும் ஏற்பட்டுள்ளது. இதை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவும் சீனாவும் அமர்ந்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது.
 1. ஆப்கானிஸ்தானில் 16 ஆண்டுகள் போரிட்டு வந்துள்ள நிலையில் அங்கிருந்து அமெரிக்க படைகள் விலகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.
12.  ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என ஈரான் அதிபர் ருஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13.   சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், எகிப்து, இஸ்ரேல், தென்னாப்ரிக்கா உட்பட உலகம் முழுவதுமுள்ள இந்திய தூதரகங்களில் இந்;திய சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேசிய செய்திகள்
 1. டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார்.
 2. இந்திய சுதந்திர தின ஸ்பெஷல் : நயாகரா நீர் வீழ்ச்சியில் இன்று(ஆகஸ்ட் 15) இரவு 10 மணி முதல் 15 நிமிடங்களுக்கு இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிரும்காட்சி இடம் பெறுகிறது. நயாகரா நீர் வீழ்ச்சியில் இந்திய தேசியக்கொடி நிறத்தில் ஒளிர வைப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
 3. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில், 1947 ஆகஸ்ட் 15ம் தேதி ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி, செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் 70 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 4. தமிழக அரசு சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடி ஏற்றினார்.
 5. சுதந்திர தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் .பி.ஜே. அப்துல்கலாம் விருதுபேராசிரியர் மற்றும் விஞ்ஞானியுமான தியாகராஜனுக்கும், கல்பனா சாவ்லா விருது-திருவண்ணாமலையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் செல்வி பிரித்திக்கும், சிறந்த மாநகராட்சிக்கான விருதுதிருநெல்வேலிக்கும், சிறந்த நகராட்சிக்கான விருதுசத்தியமங்கலத்திற்கும், சிறந்த பேரூராட்சிக்கான விருதுபொன்னம்பட்டிக்கும், சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருதுசேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் வழங்கப்பட்டது.
 6. தமிழக முதல்அமைச்சரின் நல் ஆளுமை விருதுதமிழ் நாடு காவல் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, வணிகவரித் துறைக்கு வழங்கப்பட்டது.
 7. 2017ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருது சென்னை போலீஸ் கமிஷனர் .கே.விஸ்வநாதன் மற்றும் கூடுதல் கமிஷனர் சேஷசாய் உள்ளிட்ட தமிழக போலீஸ் அதிகாரிகள் 26 பேருக்கு வழங்கப்பட்டது.
 8. உடல் உறுப்புகளை ஒரு வாரம் பாதுகாக்கும் புதிய ரசாயன திரவத்தை இந்திய டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
 1. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்று சாதனைப் படைத்தது.
 2. ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை போட்டியின் போது நடுவரை தள்ளி விட்டதால் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோவுக்கு, ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் அபராத தொகையும் ஐந்து போட்டிகளில் விளையாட தடையும் விதித்துள்ளது.
 3. உலக தடகள போட்டியில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
 4. ரோஜர்ஸ் கோப்பை சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரே வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 5. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியாவும், தொடர் நாயகனாக தவனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
 6. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான செமன்யா தங்கப் பதக்கத்தை வென்றார்.
 7. இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் நீக்கப்பட்டார்.
29.  5வது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 28வது ஆட்டத்தில் புணேரி பால்டான் பெங்கால் வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
30.   ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 9வது இடத்துக்கும், ஷிகர்தவன் 28வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
31.   ஐரோப்பிய ஹாக்கி தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான 2வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.
32.   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சைக்கிள் பந்தய வீரர் ஸ்டீபன் ஊல்ட்ரிட்ஜ் நேற்று மரணமடைந்தார்.
33.   தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தோற்கடித்தது.
34.   விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 5 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
35.   கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 28ந் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.
வர்த்தக செய்திகள்
 1. சமூக ஈடுபாட்டை கொண்ட வங்கியான செலான் வங்கிக்கு மதிப்பு மிக்க விருதான “SLT 01” விருது வழங்கப்பட்டது. இவ்வங்கி இதுவரை (உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில்) 35 விருதுகள் பெற்றுள்ளது.
 2. இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சொத்து மதிப்பு பட்டியலில் சச்சின் டென்டுல்கர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
 3. பேட்டரி இல்லாத மொபைல் போன்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இவை அறிமுகம் செய்யப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 4. இந்தியாவில்முதன் முறையாக கோல்டு ஆப்ஷன் கான்ட்ராக்ட் வர்த்தகத்தை புதுடெல்லி மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
 5. நாடு முழுவதிலும் புதிதாக 60 புத்தக விற்பனை நிலையங்களைத் தொடங்கவும், 800 புதிய தலைப்புகளில் தமிழ் நூல்களை வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக சப்னா புத்தக நிறுவனங்களின் தலைவர் நிஜேஷ் ஷா தெரிவித்துள்ளார்.
 6. ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணத்தைச் செலுத்தும் முறையினை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்ததுள்ளது.
42.  ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் ரூ 20428 கோடி.
43.   பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத் தொடர்பு சேவைக்கான உரிமத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
44.   நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி இருமடங்கு அதிகரித்து ரூ 86775 கோடியானது.
45.   பொதுத் துறையைச் சேர்ந்த ஐடிபிஐ வங்கி முதல் காலாண்டில் ரூ.853 கோடி இழப்பைக் கண்டுள்ளது.
46.   பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1757 நபர்களின் வாரிசுகளுக்கு விபத்து காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

47.  பொதுத்துறை வங்கிகளின் கடன் 2017ம் ஆண்டின் ரூ.92 ஆயிரம் போடி அதிகரித்துள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி இது தெரிய வந்துள்ளது.
Post a Comment