TNPSC Current Affairs 24th August 2017

TNPSC Tamil Current Affairs August 2017
TNPSC Tamil Current Affairs August 2017 2018 for Group 1, Group 2, Group 2A, Group 4 & VAO Exams .We are happy to announcing the Good news for TNPSC aspirants we are going to post daily current affairs in our www.tamilanguide.in website. We prepare TNPSC Tamil current affairs from top current affairs website and leading news papers. We are providing both English and Tamil TNPSC Daily & Monthly current affairs questions.

TNPSC Current Affairs 2017
24.08.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
  1. உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் ரயில்களை சீனா மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ரயில்களுக்குஃபக்ஸிங்(புத்துயிர்ப்பு)” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  2. சவூதி அரேபியாவில், சாலையின் குறுக்கே நடனமாடிய 14 வயது சிறுவனை அந்நாட்டு போலிசார் கைது செய்தனர்.
  3. வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்கு உதவிய ரஷ்ய, சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
  4. அமெரிக்காவின் பிரபலபோர்ப்ஸ்பத்திரிக்கை உலக அளவில் சினிமா துறையில் பணக்காரர்களுக்கான பட்டியலை நேற்று (23.08.2017) வெளியிட்டது. இதில் முதல் இடத்தை ஆலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் பிடித்துள்ளார். இதில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய இந்தி நடிகர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். பிரபல நடிகர் ஷாருகான் 8வது இடத்தில் உள்ளார்.
  5. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இயற்கை ஒளித் தொகுப்பினை அதிகரிக்கசைபோர்க்”; எனும் பாக்டீரியாக்களை உருவாக்கியுள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் அதிக அளவு சூரிய ஒளியை சோலார் கலங்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடியது.
  6. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள முஸ்லீம் தொண்டு நிறுவனம் 153.1 கிலோ எடையுள்ள மிகப்பெரிய சமோசா தயாரித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.
  7. ஆசியாவின் பொருளாதார மையமாக விளங்கும் ஹாங்காஹ் நகரை கடுமையான ஹாடோ புயல் தாக்கியது.
  8. வடகொரியாவில் கூடுதலான ராக்கெட்டுகள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வெடிகுண்டுகள் ஆகியவற்றை தயார் செய்ய அந்நாட்டு ஜனாதிபதிகிம் ஜங் உன்உத்தரவிட்டுள்ளார்.
  9. அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலை கழுகு. ஆலாஸ்காவிலுள்ள அனலாஸ்கா தீவில் இந்த கழுகுகள் வசிக்கின்றன.
சர்வதேச நிகழ்வுகள்
  1. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 4வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
  2. நாட்டின் முதலாவது மக்களவையில் இடம் பெற்றிருந்த எம்.பி.யும், மணிப்பூர் முன்னாள் முதல்வருமான சிஷாங் கெய்ஷிங்(96) நேற்று(23.08.2017) காலமானார்.
  3. இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக ஏர் - இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வனி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. உலக அளவில் முதல் 10 மொழிகளில் தமிழைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் . பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
  5. யமுனை நதியில் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பது மற்றும் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் டெல்லி மாநில அரசு எந்தவொரு அறிக்கையும் தாக்கல் செய்யாததால் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
  6. கடல்சார் ஆராய்ச்சிக்கான .ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 31ம் தேதி விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
  7. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டும் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  8. பிற்படுத்தப்பட்ட மக்களின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  9. திருப்பத்தூர் அருகே உள்ள கோணப்பட்டு கிராமத்தில் சோழர் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
  10. தமிழகத்தில் 21 வகையான அரிய மூலிகை தாவரங்கள் வளர்க்கும் திட்டத்தை தமிழக வனத்துறை செயல்படுத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஐரோப்பிய சுற்றுப்பயணம் : இந்திய பெண்களுக்கான ஹாக்கி அணி அறிவிப்பைஹாக்கி இந்தியாஅமைப்பு வெளியிட்டது.
  2. உலக பேட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
  3. ஜெர்மனி ஆண்கள் டென்னிஸ் தலைவராகபோரிஸ் பெக்கா”; நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. கனெக்டிவ் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா(போலந்து) கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
  5. சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் வெய்ன் ருனி ஓய்வு பெறுகிறார்.
  6. இந்தியா - இலங்கை 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று(24.08.2017) நடைபெறுகிறது.
  7. ஸ்பார்டன் மார்ஷியல் ஆர்ட்ஸ்அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி திருத்தணியில்(21.08.2017) நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர்.
வர்த்தக செய்திகள்
  1. அதிகப்பட்சமாக 31.84 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் பால் சாதனைப் படைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  2. பொதுத்துறை நிறுவனமான பாரத் வேகனை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  3. வைரஸ் அச்சுறுத்தல் உள்ள 500க்கும் மேற்பட்ட செல்போன் ஆப்களை, ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
  4. இந்திய கடற்படையை வலிமையாக்க மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 234 விமானங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
  5. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.64.05 ஆக உள்ளது.
  6. வேளான் ஸ்டார்ட் அப்நிறுவனங்களுக்கு உதவ தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  7. சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட சி – 435, சி – 436 ஆகிய இரண்டு அதிநவீன ரோந்துப் படகுகள் இந்தியக் கடலோரக் காவல்படையிடம் நேற்று(23.08.2017) ஒப்படைக்கப்பட்டது.
Post a Comment