TNPSC Current Affairs 27th August 2017

TNPSC Tamil Current Affairs August 2017
TNPSC Tamil Current Affairs August 2017 2018 for Group 1, Group 2, Group 2A, Group 4 & VAO Exams .We are happy to announcing the Good news for TNPSC aspirants we are going to post daily current affairs in our www.tamilanguide.in website. We prepare TNPSC Tamil current affairs from top current affairs website and leading news papers. We are providing both English and Tamil TNPSC Daily & Monthly current affairs questions.

TNPSC Current Affairs 27.08.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
  1. மத்திய அரசுத்துறைகளின் செயல்பாடுகள் அனைத்தையும் நிகழாண்டு இறுதிக்குள் கணினிமயமாக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலன் - குறை தீர்ப்பாய்த்துறை இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
  2. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் செல்லிடப்பேசி பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட இருப்பதாக மாநில சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
  3. மாணவர்களுக்கு சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை பெற்றோர்கள் தங்கள் செல்போனின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
  4. செப்டம்பர் 1ம் தேதி முதல் ஓட்டுனர்கள் தங்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
  5. தமிழக அரசின் இணை செயலராக இருந்த ஆஷிஷ்குமார், இணைமந்திரி அலுவலக சிறப்பு அதிகாரியாகவும், பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. அகில இந்திய டென்னிஸ் அசோசியேஷனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அங்கீகாரம் கொடுத்துள்ளது
சர்வதேச நிகழ்வுகள்
  1. பாகிஸ்தானில் 19 ஆண்டுகள் கழித்து நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் தொகை 57 சதவீதம் உயர்ந்து 20.78 ஆக அதிகரித்துள்ளது.
  2. குடிநீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் டிமனெஷியா (மறதி நோய்) ஏற்படுவது குறையும் என்று டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
  3. 60000 வருடங்களாக வெளி உலக தொடர்பில்லாமல் வாழும் தீவு - அந்தமான் நிக்கோபார் தீவு (பழங்குடி மக்கள் இன்றும் இத்தீவில் வசித்து வருகின்றனர்)
  4. இலங்கையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு முதல் முறையாக 119000 ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
  5. இரயில் விபத்தில் இரு கைகளை இழந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
  6. முகத்தில் முடி, மச்சம், தோல் நோய் மற்றும் மாறுகண் இருந்தால் ஆசிரியர் பணி கிடையாது என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது
  7. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் குடையையும் ரெயின் கோட்டையும் இணைத்துடூ இன் ஒன் குடைரெயின்கோட்டை சீனர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
வங்கி மற்றும் நிதிதுறை நிகழ்வுகள்
  1. அரசாங்க விதிமுறைகளின் படி தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் இறக்குமதி செய்யும் வங்கிகள் ஜிஎஸ்டியின் கீழ் 3% வரி செலுத்த வேண்டும், இது உள்ளீட்டு வரிக் கடனாகக் கோரலாம்.
விளையாட்டு
  1. 74 வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஸ்னா 15வது முறையாகவும், சௌரவ் கோஷல் 12வது முறையாகவும்சாம்பியன்பட்டத்தை வென்றனர்.
  2. 19வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 49 கிலோ உடல் எடைப் பிரிவில் இந்திய வீரர் அமித் பான்கல் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
  3. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
  4. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சாய்னா வெண்கலப் பதக்கம் வென்றார்
  5. அமெரிக்காவை சேர்ந்த தொழில்முறை குத்து சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனைப் படைத்துள்ளார்.
  6. தென் மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதக்கங்களை வழங்கினார்
  7. இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனான உபுல் தரங்காவுக்கு 2 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாக கபுகேதரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரி மைதானத்தில் நேற்று(26.08.2017) தொடங்கியது
வர்த்தக  நிகழ்வுகள்
  1. கணினிகள் மற்றும் பிரிண்டர்கள் விற்பனை செய்வதில் அமெரிக்க ஐடி நிறுவனமான எச்பி முன்னிலை வகிக்கின்றது.
  2. தங்கம் இறக்குமதியில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தென் கொரியாவிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது.
  3. புதிய 200 ரூபாய் நோட்டுகள் .டி.எம் மூலம் விநியோகம் செய்யப்படுவது தாமதம் ஆகும் என்று சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகம் தெரிவித்துள்ளது.
  4. தமிழகத்தில் காற்றின் வேகம் குறைந்ததன் விளைவாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வது குறைந்துள்ளது.
  5. கூகுள் ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பம்ஆண்ட்ராய்ட் ஒரியோஎன பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது(கூகுள் நிறுவனம்).
நியமானங்கள்
  1. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிஜு பட்நாயக் விருதினை பேராசிரியர் டிகம்பார் பெஹரா வழங்கினார்.
  2. பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் நாச்சிக்கெட் மத்துசுடான் மோர் இந்திய ரிசர்வ் வங்கியின் கிழக்கு உள்ளூர் வாரிய உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
  3. அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம்-யூனியன் பிரதேசங்களின் (AGMUT) 1984 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சி..எஸ்.எஃப்) கூடுதல் இயக்குனர் ஜெனரல் (ADG) தர்மேந்திர குமார், ரயில்வே பாதுகாப்புப் படைகளின் பணிப்பாளர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. பத்மலி அக்ராலா,டாடா சன்ஸ்ஸில் சக்தி மற்றும் எரிசக்தி துறையில் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இந்தோனேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் கூகுள் அதன் பொது Wi-Fi திட்டத்தை தொடங்குகிறது. இந்தோனேசியாவின் தொடக்கமானது 'Google Station' இன் ஆரம்ப விரிவாக்கம் ஆகும், ஏனெனில் இது 18 மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒரு தொகுதி என அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. தேசிய பங்குச் சந்தை (NSE) அதன் மின்னணு தளமான ENIT (டிரேடிங் உறுப்பினர்களுக்கு மின்னணு என்எஸ்இ இன்டர்ஃபேஸ்) வர்த்தகத்தை விரைவாகச் செயலாக்க மற்றும் பங்களிப்பாளர்களின் பங்களிப்பு மூலம் மொத்தமாக மொத்த / பிளாக் வர்த்தகங்களுடன் தொடர்புடையதாக அறிவிக்க முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 8 முதல் இது பயனுள்ளதாக இருக்கும்.


சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
  1. மோஸ் ஒரு மலிவான மாசுபாடு மானிட்டராக பணியாற்றுகிறதுஜப்பான் விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, மோஸ் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் உள்ள பாறைகள் மற்றும் மரங்களில் காணப்படும் நுட்பமான பாசிமணிகளை வளிமண்டல மாற்றத்தின் தாக்கத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தலாம் மற்றும் நகர்ப்புற மாசுபாட்டைக் கண்காணிக்க முடியும்.
Post a Comment