TNPSC Current Affairs 9th August 2017

TNPSC Current Affairs 2017
09.08.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    தமிழகத்தில் வாலாஜாபேட்டைபூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1103 விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
2.    நாட்டின் 13ஆவது குடியரசு துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3.    ஆகஸ்ட் 7 திங்கள்அன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பூரண கிரகணம் அல்ல என்றும் சந்திரன் பகுதியளவே மறைந்து காட்சியளிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
4.    தெற்கு காஷ்மீரில் இமய மலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கும், பூஞ்ச் மாவட்டத்தில் மலை மீது அமைந்துள்ள புத்த அமர்நாத் கோயிலுக்கும் இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. 40 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை நாளை நிறைவடைய உள்ளது.
5.    மத்திய கொள்கைக் குழு (நிதி ஆயோக்) அமைப்பின் துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் ராஜீவ் குமாரை மத்திய அரசு நியமித்தது. துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா இருந்து வந்தார்.
6.    ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
7.    ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டுவரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
8.    இலவச எரிவாயு (எல்பிஜி) இணைப்பு பெற விரும்பும் ஏழைப் பெண்கள் அதற்காக ஆதார் எண் கோரி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
9.    கைத்தறி, விசைத்தறி பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நிகழ்வுகள்
10. ஆகஸ்ட்6, 1945 உலகின் முதல் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட தினம். ஜப்பானைச் சேர்ந்த ஹிரோஷிமா என்ற நகரின் மீதுலிட்டில் பாய்என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசிய 72வது ஆண்டு தினம்.
11. பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு, 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ந் தேதி ஏற்படுத்தப்பட்டது. 2016ம் ஆண்டு நவம்பர் 4ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த உடன்பாட்டில் 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 158 நாடுகள் அதை உறுதி செய்துள்ளன. பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் சேருமாறு அமெரிக்காவுக்கு .நா சபை அழைப்பு விடுத்துள்ளது.
12. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் பதிவுகள் பிரிண்ட் செய்யப்பட்டடாய்லெட் பேப்பர்அமேஸான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்த சிலமணி நேரத்தில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துவிட்டது.
13. மாற்றுத் திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கம்ப்யூட்டரை இயக்கும் விதமாக புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோஷாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கம்ப்யூட்டர் உபயோகிப்பரவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
14. ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த அதிபர் தேர்தலில் பால் ககாமி 98 சதவீத வாக்குகளைப் பெற்று 3வது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பால் ககாமி, 17 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
15. அமெரிக்காவின் முன்மொழியப்பட்ட வடகொரியா மீதான கடுமையான தடைத் தீர்மானத்தை .நா சபை நிறைவேற்றியது. இத்தீர்மானம் வடகொரியாவின் 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஏற்றுமதிகளின் மீது விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது விதிக்கப்படும் ஏழாவது தடைத் தீர்மானம் இது.
விளையாட்டு நிகழ்வுகள்
16. 16வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப்போட்டியில் 9.95 மணித்துளிகளில் வெற்றி இலக்கை அடைந்த உலகின் அதிவேக மனிதர் மற்றும் மின்னல் வீரர் ஜமைக்காவின் உசைன் போல்ட் வெண்கலம் வென்றார்.
17. தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தோற்கடித்தது.
18. 91ஆவது எம்சிசி முருகப்பா தங்க கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஓஎன்ஜிசி, பெங்களுரு ஹாக்கி அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
19. பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா, தடகள பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் காந்தி ஆகியோருடைய பெயர்கள் சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சார்ய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
20. இந்த ஆண்டுக்கான டென்னிஸ் அர்ஜூனா விருதுக்கு இந்திய டென்னிஸ் வீரர் சகெத் மைனெனி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
21. லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தகுதிச்சுற்றோடு வெளியேறினார்.
22. 5வது சீசன் புரோ கபடிலீக் போட்டியின் 14வது ஆட்டத்தில் மும்பா அணி தபாங் டெல்லி அணியைத் தோற்கடித்தது. மும்பா அணிக்கு இது 2வது வெற்றியாகும்.
வணிக நிகழ்வுகள்
23. பொதுத் துறையைச் சார்ந்த ஆந்திரா வங்கியின் முதல் காலாண்டு லாபம் 30% அதிகரித்தது.
24. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் லாபம் 14% வளர்ச்சி கண்டது.
25. விரிவாக்கப் பணிகளுக்காக நடப்புநிதி ஆண்டில் ரூ7100 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
26. மெட்ராஸ் ரப்பர் பேக்டரியின் இயக்குநர் குழுவின் முழு நேர இயக்குநர்களாக சமிர் தரியன் மற்றும் வருண் மாமென் இணைந்திருக்கின்றனர்.
27. மத்திய அரசு வேலை வாய்ப்பை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் வியாபாரம் புரிவதற்கான வசதிகளை ஏற்படுத்தவும்தேசிய நெடுஞ்சாலை கிராமம்மற்றும்தேசிய நெடுஞ்சாலை கூடுஎன்ற இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

28. ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 14% வளர்ச்சி கண்டது. வரும் 2020ல் சீனாவை மிஞ்சும் வகையில் காலணிகளை தயாரிக்கும் ஆற்றல் நம் நாட்டில் உள்ளது என மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
Post a Comment