Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 11th September 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
11.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    பிரிட்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எழுத்து முறை தேர்வை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.(மாணவர்களின் கையெழுத்து சரியில்லாத காரணத்தினால்)
2.    அமெரிக்காவில் இன்று(செப்டம்பர் 11) இரட்டை கோபுரம்(உலக வர்த்தக மையம்) தகர்க்கப்பட்ட 16வது ஆண்டு நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
3.    சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் கார்களை உற்பத்தி செய்வதில் சீனா முதலிடத்தில் உள்ளது.
4.    ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36வது கூட்டத் தொடர் இன்று (செப்டம்பர் 11) தொடங்கி செப்டம்பர் 29ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறுகிறது.
5.    புற்று நோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் காணும் வகையில்மாஸ்பெக் பேனாஎன்ற தொழில்நுட்பத்தை டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டபிடித்துள்ளனர்.
6.    இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகள் அரசுமயமாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
7.    காஷ்மீர் போலீஸாருக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராம்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
8.    108 ஆம்புலன்ஸ்களை தொடர்பு கொள்ளும் அழைப்பாளரின் இடத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கண்டுபிடிக்கும் வசதியை(குறிப்பிட்ட காலத்திற்குள் போய் சேரும் ஜிபிஎஸ் வரைபடம் ஓட்டுநரின் முன் உள்ள மொபைல் போனுக்கு அனுப்பப்படும்) தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) அறிமுகம் செய்துள்ளது.
9.    மேற்கு வங்கத்தின் பெயரைபங்களாமாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
10. செப்டம்பர் 11 இன்று பாரதியாரின் 96வது நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு பாரதியாரின் பாடல்ளை தேசிய உடமையாக்கிள்ளது மற்றும் பாரதியாரை தேசிய கவிஞராகவும் அறிவித்துள்ளது.
11. ஆதார் விவரத்தை இணைக்காத சிம்கார்டுகளின் சேவைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு துண்டிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள சின்னாறு அணை 12 ஆண்டுகள் கழித்து தற்போது நிரம்பியுள்ளது.

13. ஸ்வச்சதாசெயலி மூலம் பொது மக்கள் அனுப்பும் புகார்கள் (குப்பைகள் அகற்றாதது, பொது கழிவறைகள் அசுத்தமாக இருப்பது) மீது நடவடிக்கை எடுக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை 23வது(4041 நகரங்களில்) இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 3வது இடத்தில் உள்ளது.
14. தெற்கு ரயில்வே சார்பில் 162 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீராவி ரயில் இன்ஜின் சென்னை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரையில் நேற்று(செப்டம்பர் 10) இயக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
15. நோயாளிகளுக்கு பிராண வாயுவை எளிதாக செலுத்துவதற்கானதொன்டைக்குழி சுவாசம்என்னும் புதிய சுவாச முறையை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் எம். பெரியசாமி கண்டுபிடித்துள்ளார்.
விருதுகள் & அங்கீகாரம்
16. திண்டுக்கல் மாவட்டம் பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கானஸ்வச் வித்யாலயா புரஸ்கார்விருது மத்திய மனித வள மேம்பாட்ட துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
17. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் பட்டம்(முதல் கிராண்ட்ஸ்லாம்) வென்றார்.
18. பொது நுழைவுத் தேர்வுகளுக்கான வினா-விடைகள் செல்போன் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
19. ஏதென்ஸில்(கிரீஸ் ) இளையோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஸிப் தொடரில் மகளிருக்கான 56 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கப்பதக்கம் வென்றார்.
20. உக்ரைன் நாட்டில் நடைபெற்ற கார்கிவ் சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நந்தகோபால் - ரோஹன் கபூர் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் நந்தகோபால் - மஹிமா அகர்வால் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றனர்.
21. இந்திய தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அந்தோனி அமல்ராஜ் சாம்பியன் பட்டம் வென்றார்.
22. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
23. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(.சி.சி) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 2வது இடத்திலும், அஸ்வின் 3வது இடத்திலும் உள்ளனர்.
வணிக நிகழ்வுகள்
24.  ‘நுண்ணறிவு திட்டம்என்ற பெயரில் சமூக வலைத்தளங்களை உளவு பார்க்கும் திட்டம் ஒன்றை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
25. பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கீழ் www.pgportal.gov.in என்ற வலைத்தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிக்கலாம்.
26. கணினி திரை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கான சரக்குசேவை வரி ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது.
வங்கி மற்றும் நிதிதுறை நிகழ்வுகள்
27. ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ்(ICICI Lombard General Insurance ) நிறுவனம் பொதுப்பங்கு வெளியிடு (ஐபிஓ) மூலம் ரூ.5,700 கோடியைத் திரட்ட முடிவெடுத்திருக்கிறது.
28. தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் அடுத்த இரு ஆண்டுகளில் 6000 பணியாளர்களுக்கு பணி வழங்க முடிவு செய்திருப்பதாக நிறுவனத்தின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி யூபி பிரவீண் ராவ் தெரிவித்துள்ளார்.

29. கருப்பு பணத்தை(Black Money) ஒழிப்பதற்காகவும் வரி ஏய்ப்பை தடுப்பதற்காகவும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை திரட்ட வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கானபுராஜெக்ட் இன் சைட்(Project in Side)என்ற திட்டத்தை அடுத்த மாதம்(அக்டோபர்) அறிமுகப்படுத்த உள்ளது
30. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் டூ, வாட் டூ("I Do not Want to Do")என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

  1. பெங்களூருவில் உள்ள பத்திரிகையாளர் கௌரி லங்கீஷ்(Journalist Gauri lankesh) பெங்களூரு மேற்கு பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் நுழைவாயில் அடையாளம் தெரியாத முச்சக்கர வண்டியில் கொல்லப்பட்டார்.
Post a Comment