Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 26th September 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
26.09.2017
------------------------------------------------------
                       இந்திய நிகழ்வுகள்
1.    நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும்சவுபாக்கிய யோஜனா(Saubhagya yojana) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
2.    இரயில்வே நிலையத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் விலையைக் கட்டாயம் அச்சிட வேண்டும் என இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
3.    சிறார் மீட்புத் திட்டம் - (இரயில் பயணத்தின் போது தொலைந்து போகும் சிறார்களை மீட்கும் மையங்கள்) உதவி மையங்களை மேலும் 47 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
4.    அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகை, தொலைபேசி, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண பாக்கி எதுவும் இல்லை என அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
5.    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இந்த மாதம்(செப்டம்பர்) முதல் மாதந்தோறும் ரூ.1200 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
6.    .சி.எஸ். அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்ற புதிய நிதிக்கட்சி நிறுவனர் .சி. சண்முகம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர் உருவ (30 அடி உயரம்) வெண்கல சிலை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
7.    மின்னுற்பத்தித் திட்டங்கள், மின்கட்டண விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய தகவல் கையேட்டை தமிழக மின் வாரியம்(டான்ஜெட்கோ) வெளியிட்டுள்ளது.
8.    தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார் வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும் 2 நாட்களில் நகல் கிடைக்கும் என தமிழக உயர்க்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிகழ்வுகள்
9.    விவசாய உற்பத்தியை 70 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று .நா. அறிவித்தத்தை அடுத்து ஆப்பிரிக்காவில் பயிர் சாகுபடியை அதிகரிக்கஆளில்லா விமானங்கள் உதவியுடன் நவீன விவசாயம்மேற்கொள்ளப்பட உள்ளது.
10. விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் களைக் கொல்லியான glyphosate - 2022ம் ஆண்டில் தடை செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
11. துபாயில் பறக்கும் டாக்ஸி சோதனை செய்யப்பட்டது. விரைவில் விண்ணில் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று துபாய் இளவரசர் ஹம்தன்பின் முகமது தெரிவித்துள்ளார்.
12. உலக அளவில் கடற்படையை விரிவாக்கும் முயற்சியில் சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
13. வங்க தேசத்தில் தங்கியுள்ள ரோஹிங்கயா முஸ்லிம் அகதிகளுக்காக இந்திய அரசு(தேசிய வேளாண் வர்த்தக சம்மேளனம் - என்ஏஎஃப்இடி) 620 டன் எடை கொண்ட உணவுப் பொருள்களை அனுப்பியுள்ளது.
வங்கி மற்றும் நிதிதுறை நிகழ்வுகள்
14. பாரத் ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்பை ரூ. 5000 லிருந்து ரூ.3000 ஆக குறைத்துள்ளது.
வணிக நிகழ்வுகள்
15. போட்ஸ்வானாவின் தேசிய மொழியில்நமது ஒளிஎன்று அழைக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய வைரம் (எடை – 1109 காரட்) ஏலம் விடப்பட்டது இதனை இங்கிலாந்து கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் 53 மில்லியன் டாலருக்கு வாங்கியது என்று கனடா லூகரா வைர கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது
16. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கி அதற்கு தலைவராக பிபேக் டெப்ரோயை நியமித்துள்ளார்.
17. ஆட்டோமொபைல் துறையினர் எதிர்பார்க்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் வளாகத்தில் 2018ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
18. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) ரூ.27,460 கோடியில் சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
விருதுகள் & அங்கீகாரம்
19. உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(ஆர்ஐஎல்) 3வது இடத்தில் உள்ளது. இந்தியன் ஆயில் 7வது இடத்தில் உள்ளது என குளோபல் எனர்ஜி தரகுறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
20. அதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகள் பட்டியலில் கனடா 2வது இடத்தில் உள்ளது.
21. நார்வே, ஃபின்லாந்து, அலஸ்கா, ஐஸ்லாந்து, கனடா மற்றும் ஸ்வீடன் ஆகிய 6 நாடுகளில் இரவிலும் சூரியன் உதித்து கொண்டிருக்கும். ஃபின்லாந்து நாட்டில் ஆயிரம் ஏரிகள் உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
22. Utah State பல்கலைக்கழகம் மற்றும் Southern Federal பல்கலைக்கழகம் இணைந்து குறைந்த எடை மற்றும் அதிக பளபளப்பு உடையதுமான அலுமினிய படிகத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்.
23. உலகில் சதுர வடிவில் கொடிகள் கொண்ட நாடுகள் - சுவிட்சர்லாந்து, வத்திக்கன்
விளையாட்டு நிகழ்வுகள்
24. 57வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் லெட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார். ரெயில்வே வீரர் அபிஷேக் பால் வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் வீரர் மான்சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர்
25. 57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ரெயில்வே வீராங்கனை எல். சூர்யா தங்கப் பதக்கம் வென்றார்.
26. இந்தியாஆஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி பெங்களுரில் செப்டம்பர் 28ம் தேதி நடக்கிறது. 5வது ஒரு நாள் போட்டி அக்டோபர் 1ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.
27. புதுக்கோட்டையில் நடைபெற்ற - புதுவை கோப்பைக்கான மாநில ஆடவர் கூடைப்பந்து போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
28. 2017 -2018 சீசன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள புணே எப்.சி. அணியின் புதிய பயிற்சியாளராக செர்பியாவின் ராங்கோ போபோவிச் நியமிக்கப்பட்டுள்ளார்.
29. திருச்சி பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சென்னை லயோலாஐசிஏஎம், செயின்ட் ஜோசப்ஸ் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.
30. தென்னிந்திய அளவில் சிபிஎஸ்இ மண்டல அளவிலான நீச்சல் போட்டி (8 மாநிலங்கள்) - 50 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையை சேர்ந்த ஹர்ஷிதா தங்கப் பதக்கம் வென்றார்.
இரங்கல்
31. உலகிலேயே மிகப் பருமனான பெண் இமான் அப்துல் அட்டி(37வயது, எகிப்து) நேற்று (செப்டம்பர் 25)காலமானார்


Post a Comment