Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 27th September 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
27.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1. சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட முதன் முறையாக உரிமை வழங்கப்படவுள்ளது
2.    அமெரிக்க அரசு 8 வடகொரிய வங்கிகள் மற்றும் 26 வங்கி அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. வடகொரியாவுடனான பிரச்சனையை தீர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என அமெரிக்க நிதித்துறைச்செயலர் ஸ்டீவன் மினுசின் தெரிவித்துள்ளார்
3.    சமூக வலை தளங்களான பேஸ்புக், டிவிட்டரைத் தொடர்ந்து, செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் - அப்புக்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
4.    உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான பைன் தீவில் (அண்டார்டிகா) உள்ள பனிப்பாறையில் சுமார் 266 சதுர கிலோ மீட்டர் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பாறை அண்டார்டிகாவில் மிகவும் வேகமாக உருகும் பனிப்பாறையாகும்
5.    இந்தியாவிலிருந்து தக்காளி ஏற்றி செல்லும் கண்டெய்னர் லாரிகள் பாகிஸ்தான் எல்லையில் நுழைய அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. மேலும் உள்ளுர் சந்தையில் கடும் தட்டுப்பாடு இருந்த போதிலும் இந்தியாவிலிருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
6.    .நா.வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவாக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கோரிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளது.
7.    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுவோர் மீது .நா. கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
8.    பிலிப்பின்ஸ் நிறுவனங்களில் பணிப்புரியும் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது
9.    செப்டம்பர் 27ம் தேதி - கூகுள் நிறுவனத்தின் 19வது பிறந்த நாள்.
தேசிய செய்திகள்
10. (செப்டம்பர் 26) - முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் அவர்களின் (85வது) பிறந்த நாள்.
11. பாட்னாவை(பீகார்) சேர்ந்த ராஜ்குமார் (98 வயது) என்ற முதியவர் நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.. பொருளாதாரம் பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
12. ஆசிய அளவில் சிறப்பு வாய்ந்த முதல் 25 அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 அருங்காட்சியங்களும் இடம்பெற்றுள்ளன. அவை விக்டோரியா மெமோரியல் ஹால்(கொல்கத்தா), சிட்டி பேலஸ்(ஜெய்ப்பூர்), பகோர் கி ஹவேலி(உதய்பூர்), யோதஸ்தால்(போபால்), ஹால் ஆஃப் ஃபேம்(ஜம்மு காஷ்மீர்).
13. சர்வதேச தொழில்துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
14. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் சசி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
15. இந்தியாவில் 2020ம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
16. டெல்லியில் (செப்டம்பர் 26) நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மாநாட்டில் பங்குபெற்ற தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில் மாநில அரசு செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
17. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்குகிறது. அதற்கான வரைவு பட்டியலை அக்டோபர் 2ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது.
18. தமிழ்நாடு செரிமான நல அறக்கட்டளை சார்பில்குடல் அழற்சி சர்வதேச மாநாடுசென்னை கிண்டியில் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
19. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவராக .எம். விக்கிரமராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
20. கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை ஐசிசி அறிமுகபடுத்துகிறது. இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் 28க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவித்து உள்ளது. இந்த முறைப்படி கிரிக்கெட் களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரர் கால்பந்து பாணியில் வெளியேற்றப்படுவார்.
21. 17வது ஜுனியர் உலக கோப்பை கால்பந்துபோட்டி அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா அகிய 6 நகரங்களில் நடக்கிறது.
22. 57வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தங்கப்பதக்கம் வென்றார்.
23. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை திரைப்படம் ஆக உருவாகிறது.
24. 57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் குண்டு எறிதலில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த தேஜிந்தர் பால் சிங் தங்கம் வென்றார்.
25. 57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் ரயில்வே அணியைச் சேர்ந்த சரிதா பி.சிங் தங்கம் வென்றார்.
26. சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பி மண்டல அளவிலான வாலிபால் தொடரில் எத்திராஜ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.
27. சென்னையில் நடைபெற்று வரும் 57வது தேசிய தடகள போட்டியில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் கேரளாவைச் சேர்ந்த ஜினு மரியா மானுவேல் தங்கம் வென்றார்.
வர்த்தக செய்திகள்
28. நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட 2வது (ஆகஸ்ட்) மாதம் ரூ.90,699 கோடி வரி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
29. பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு செலவு இந்த ஆண்டு ரூ.14,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
30. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மற்றும் போர்ட்போலியோ மேனஜ்மெண்ட் நிறுவனங்கள் கமாடிட்டி பங்குகளில் வர்த்தகம் செய்ய செபி அனுமதி வழங்க உள்ளது.
31. ரிலையன்ஸ் கேபிடல், மருத்துவ காப்பீட்டுக்கென தனி நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது
32. ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் அணிந்தபாக்சர் ஷார்ட்ஸ்கள்ரூ.3.5 லட்சத்திற்கு நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.
33. மாருதி சுசுகி, வேகன் ஆர் காரின் மொத்த விற்பனை இந்தியாவில் 20 லட்சத்தை தாண்டி சாதனைப் படைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
34. நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் டேட்ஸன்ரெடிகோ கோல்டுபுதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.


Post a Comment