Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 29th September 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
29.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    வடகொரிய நாட்டவர்கள் ஸ்ரீலங்காவிற்குள் நுழைவதற்கான கட்டுபாடுகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் அதிகரித்துள்ளது..
2.    ஜெர்மனி நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3.    பிளேபாய்பத்திரிகையின் நிறுவனர்_க் ஹெப்னர்” (91 வயதில்) வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம்(28-09-2017) காலமானார்.
4.    செப்டம்பர் 29 உலகம் முழுவதும் இதய தினமாகக் அனுசரிக்கப்படுகிறது.
5.    சீனாவில் செயல்படும் வடகொரிய நிறுவனங்கள் 120 நாட்களுக்குள் மூடப்பட வேண்டும் என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
6.    அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி ஜோசப் டன்ஃபோர்ட் மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர்வதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.
7.    அமெரிக்காவில் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளில் அதிரடியான சீர்திருத்தங்களை (இனி தனிநபர் வருமான வரி விகிதங்கள் 10, 25, 35 சதவீதம்) அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
தேசிய செய்திகள்
8.    ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்ககூடாது என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
9.    கிராமப்புற மக்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு அளிக்கும்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புஉறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
10. இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்ட ராம்நாத் கோவிந்த் முதல் வெளிநாட்டு பயணமாக வரும் அக்டோபர் 4-ம் தேதி எத்தியோப்பியா (ஆப்பிரிக்கா) செல்கிறார்.
11. நியுயார்க்கில் நடைபெற்ற என்ஜிஓ மாநாட்டில் சிறார்களுக்கு (பிரதாம் அமைப்பு) கல்வி அளிப்பதற்காக ரூ.26.21 கோடி நிதி கிடைத்துள்ளது.
12. மகாராஷ்ராவிலுள்ள அம்தேலி (காட்சிரோல் என்ற மாவட்டம்) என்ற குக்கிராமத்திற்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் மற்றும் பஸ் வசதி கிடைத்துள்ளது.
13. துப்புரவு மேற்பார்வையாளர்பணி தொடர்பாக சிறுபான்மையின இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க நாடு முழுவதும் 100 மையங்கள்கரீப் நவாஸ்அமைக்கப்படும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
14. 57-வது தேசிய ஓபன் தடகள போட்டியில் ரெயில்வே அணி 16 தங்கப்பதக்கத்தை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
15. லக்னோவில் இந்தியா ரெட் - இந்தியா ப்ளு அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப் போட்டியில் 163 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ரெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
16. சர்வதேச பாட்மிட்டன் தரவரிசையில் இந்திய வீரர்கள் 5 பேர்(ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத், அஜய் ஜெயராம், சமீர் வர்மா) முதல் 20 இடங்களில் உள்ளனர்.
17. 5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 98-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி பெங்களுரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது.
18. சான் பிரான்சிஸ்கோ ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
19. 57-ஆவது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் லட்சுமணன் (10 ஆயிரம் மீ. ஓட்டத்தில் தமிழக வீரர்) தங்கப் பதக்கம் வென்றார்.
வர்த்தக செய்திகள்
20. பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் (எரிவாயு, மண்ணெண்ணெய், ரேஷன் மற்றும் உணவு) வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.58,000 கோடி மீதமாகி இருக்கிறது என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
21. டாடா கேபிடல் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜிவ் சபர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து இவர் பொறுப்புக்கு வருவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
22. ஹெச்பிசிஎல் நிறுவனத்தை கையகப்படுத்த தேவையான நிதியை திரட்ட கெயில், ஐஓசி ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்ய ஓஎன்ஜிசி பரிசீலித்து வருகிறது.
23. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
24. 2017 செப்டம்பர் 18 வரை ரூ.3.7 லட்சம் கோடிநேரடி வரி வருவாய்மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


No comments: