TNPSC Current Affairs 5th September 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
05.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.   உலகின் மிக அழகான நாடுகள் பட்டியலில் ஸ்காட்லாந்து முதலிடத்தில் உள்ளது.
2.   இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு துறை பேராசிரியரான இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானிகெவ்தலைமையிலான குழு மனித உடலை ஊடுருவி பார்க்கும் மருத்துவ கேமராவை கண்டுபிடித்துள்ளனர்.
3.   வன்முறை காரணமாக மியான்மரில் பத்து நாட்களில் 87 ஆயிரம் பேர் வெளியேறி வங்க தேசம் சென்றுள்ளனர் என .நா தெரிவித்துள்ளது.
4.   சுற்றுலா பயணங்களின் போதும், பீட்சா போன்றவற்றினை டெலிவரி செய்யும் போதும் உதவக்கூடிய நவீன ரக ரோபோவை Massachusetts Institute of Technology(MIT)நிறுவனம் வடிவமைத்துள்ளது.
5.   ஷியாமென்(சீனா) நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு இன்றுடன்(05.09.2017) நிறைவடைகிறது.
6.   அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்த தயார் என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
7.   செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய செய்திகள்
8.   (செப்டம்பர் 05) இன்று ஆசிரியர் தினம் (ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர்.இராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.)
9.   நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து மத்திய அரசு பரீசிலித்து வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10.  மத்திய நிதித்துறை இணையமைச்சராக சிவ்பிரதாப் சுக்லா(65) நியமிக்கப்பட்டார்.
11.  தொழிலாளர் நலத்துறை இணையமைச்சராக சந்தோஷ்குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
12.  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் 17க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
13.  வாகனம் ஓட்டுபவர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதை உயர் நீதி மன்றம் மறுத்து விட்டது. ஆனால் நாளை(செப்டம்பா 06) முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்படுகிறது.
14.  சட்ட விரோதமாக செயல்படும் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அக்கட்சியின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று உயர் நீதி மன்றம உத்தரவிட்டுள்ளது.
15.  சென்னையை சேர்ந்த பெண் டாக்டர். ஐசா பாத்திம்மா ஜாஸ்மின், ஆதரவற்றோர், ஏழைகள் பசியாற உணவளிக்கும் விதமாகஐயமிட்டு உண்என்ற உணவு பெட்டகத்தை திறந்து வைத்துள்ளார். குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த உணவகத்தில் உணவுகள் பாதுகாக்கப்படுவதால் ஆதரவற்றோர் பயன் பெறுகின்றனர்.
விளையாட்டு செய்திகள்
16.  இலங்கைக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
17.  ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் இளையோர் பளுதூக்கும் போட்டியில் 44 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கன்சாம் ஊர்மிளா தேவி தங்கப் பதக்கம் வென்றார்.
18.  மகாராஷ்டிரா ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், மகாராஷ்டிராவின் ஆதித்யா ஜகதாபும், மகளிர் ஒற்றையர் பிரிவில் உத்தரப் பிரதேசத்தின் சச்சிதா இங்கலேவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
19.  ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கு தயாராகும் இந்திய மகளிர் அணியின் கேப்டனாகஸ்டிரைக்கர் ராணிநியமிக்கப்பட்டுள்ளார்.
20.  ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். “ஒரு நாள் தரவரிசையில் அதிக புள்ளிகள்(887) பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்
21.  சீனாவில் நடக்கும் சர்வதேச மூத்தோர் தடகள போட்டிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் யுவராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனாவில் ஆசிய மூத்தோர் தடகள போட்டி செப்டம்பர் 24ல் துவங்கி செப்டம்பர் 28 வரை நடக்கிறது.
22.  ஒரு நாள் போட்டிக்கான ஐசிசி பவுலிங் தரவரிசையில் பூம்ரா 4வது இடத்தில் உள்ளார்.
23.  ஒரு நாள் போட்டிக்கான சிறந்த அணிகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
வர்த்தக செய்திகள்
24.  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக சுரேஷ் பிரபு பொறுப்பேற்றார்.
25.  இரயில்வேத் துறை அமைச்சராக பியுஷ் கோயல் பதவி ஏற்றார்.
26.  தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கே.வி.ராமமூர்த்தி பதவி ஏற்றுள்ளார்.
27.  கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகரியாக பி.ஆர்.சேஷாத்திரி பதவி ஏற்றுள்ளார்.
28.  இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2018-2022) ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு வாங்கியுள்ளது
29.  டிக்சான் டெக்னாலஜிஸ், பாரத் ரோட் நெட்வொர்க் என்ற இரு நிறுவனங்களின் பங்கு வெளியீடு நாளை(செப்டம்பர் 06) தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி முடிவடைகிறது.
30.  ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை (ஹெச்பிசிஎல்) கையகப்படுத்துவதற்காக, ஓஎன்ஜிசி நிறுவனம் முதல் முதலாக ரூ.25000 கோடி கடன் திரட்டவுள்ளது.

31.  சிங்கப்பூரை சேர்ந்த டிபிஎஸ் வங்கி இந்தியாவில் தனித்து செயல்படுவதற்கான அனுமதியை பெற்றுள்ளது.
Post a Comment