TNPSC Current Affairs 9th September 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
09.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வழக்கறிஞர்மணீஷா சென்ட்அமெரிக்க பொருளாதார ராஜதந்திரியாக நியமிக்கப்பட உள்ளார்.
2.    அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில்ஹார்விபுயல் பாதிப்பு நிவாரண நிதி திரட்ட 5 முன்னாள் அதிபர்கள் ஒன்றிணைந்துஒன் அமெரிக்கா அப்பீல்என்ற நிவாரண நிதியை அறிவித்துள்ளனர். இந்நிதியில் பொது மக்களின் நிதி தொகையும் இடம் பெறுகிறது.
3.    உலகில் அனல் வீசும் வெப்பம் மற்றும் நடுங்க வைக்கும் குளிர் என்ற புவியியல் அமைப்பைக் கொண்ட நாடு சிலி. உலகில் அதிகமான எரிமலைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் சிலி(2000 தொடர் எரிமலைகள்) 2வது இடத்தில் உள்ளது.
4.    புற்று நோயைத் தாக்கி அழிக்கும் வகையில் நோயாளிகளின் நோய் எதிப்பு அமைப்பையே மாற்றி அமைக்கும் புதிய சிகிச்சை துறைக்கு அமெரிக்காவில் உள்ள எஃப்.டி. முதன் முறையாக அனுமதி வழங்கியுள்ளது.
5.    நியூயார்க்(அமெரிக்கா) நகரில் செயலபட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஹபீக் வங்கியை அமெரிக்கா மூடியது. மேலும் அந்த வங்கிக்கு 225மில்லியன் டாலர்களை(ரூ1,460 கோடி) அபராதம் விதித்தது.
6.    சிங்கப்பூரில் அனாதை குழந்தைகள் வளர்ப்பில் 32 ஆண்டுகள் சேவையாற்றிய பெண்ணுக்குசிறந்த சமூக சேவகர்விருதைதப்லாபத்திரிக்கை வழங்கியது.
7.    கனடா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த 80 வயது ஆசிரியர் திருமதி.யோகரணம் செல்லையா முதுகலைமாணி பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
தேசிய செய்திகள்
8.    இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமியின் இணையதளத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த எழுத்தாளர்கள் தங்களை குறித்த தகவல்களை (hhttp://sahitya-akademi.gov.in) டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளும் புதிய முறையை சாகித்ய அகாடமி அறிமுகப்படுத்தியுள்ளது.
நியமனங்கள்
9.    சரக்குசேவை வரி விதிப்பு முறையில், வரிக் கணக்குகளைச் செலுத்துவதற்கு உதவும், ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக .பி.பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
10. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் பசுமையைப் பராமரிக்க வேண்டும் என்று தெசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
11. இரயில் பாதைகளை சோதிக்கும் (கைகளால் இயக்கப்படும்) டிராலிகளில் இனி ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என இரயில்வே அமைச்சம் தெரிவித்துள்ளது.
12. ஜிஎஸ்டி கவுன்சிலின் 21வது கூட்டம் இன்று (09.09.2017) (நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில்) ஹைதராபாத்தில் நடக்கிறது
13. வெளி நாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்க தகுதி சான்றிதழ் அவசியம் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
14. தமிழ் மொழியை உலக அளவில் பரப்பும் வகையில் தமிழ் பிரசார சபை விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
15. குடும்ப நல நீதிமன்றங்களைடிஜிட்டல்முறைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்கா ராமன் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
16. இந்திய ஆடவர் ஹாக்கி அணி பயிற்சியாளராக நெதர்லாந்தின் ஜோர்ட் மாரிஜ்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
17. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளார்.
18. 2018ம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேகலாயம், மணிப்பூர், மிஸாரம், சிக்கிம், நாகலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களும் தனித்தனி அணிகளாக சேர்த்துக் கொள்ளப்படும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ) தெரிவித்துள்ளது.
19. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணிகள் நேற்று(செப்டம்பர் 08) சென்னை வந்தனர்.
20. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
21. உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கப் பதக்கம் வென்றார்.
22. சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
வர்த்தக செய்திகள்
23. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு முதல் முறையாக ரூ.20 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்திய மியூச்சுல் பண்ட் நிறுவனம் (ஆம்பி) தெரிவித்துள்ளது.
24. 2.68 லட்சம் நியாய விலை கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
25. ஆட்டோமேஷன் அதிகரிப்பால் ஐடி துறையில் 7 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என ஹெச்எப்எஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.
26. ஜப்பானை சேர்ந்த சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் குஜராத்தில் பெட்ரிக் ஆலையை அமைக்க உள்ளது.
27. ஹார்லி டேவிட்ஸன் இந்தியா நிறுவனம் இரண்டு மாடல் பைக்குகளுக்கான விலையை ரூ.2.50 லட்சம் வரை குறைக்க உள்ளது.
28. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனை 4.3 சதவீதம் உயர்ந்துள்ளது.


Post a Comment