Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 12th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
12.10.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    அமெரிக்கா அதிபர் பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து தங்கள் நாடு வெளியேறுவதாக அறிவித்தார். தற்போது முந்தைய அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் திட்டத்தை டிரம்பின் நிர்வாகம் கைவிட உள்ளது என அமெரிக்க சுற்றுச்சுழல் பாதுகாப்பு முகமையின் தலைவர் ஸ்காட்ருட் தெரிவித்துள்ளார்.
2.    இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களால் பாடசாலைகளுக்கு வராமல் இடைநிறுத்தம் செய்யும் மாணவர்கள் பயன் பெறும் விதமாகபாடசாலைக்கு வந்தால் நாளொன்றுக்கு ரூ.100 வழங்கப்படும் புதிய திட்டத்தை அந்நாட்டு கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
3.    பாகிஸ்தான் பயங்கராவாதி ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சி தேர்தல்களில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
4.    விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும்டி.சி.4’ விண்கல் இன்று (அக்டோபர் 12) பூமியை கடந்து செல்வதாகவும் இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
5.    ஆழமான வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பயங்கர காயங்களை இனி தையல் போடாமல் குணப்படுத்தும்; பசையைமீட்ரோசிட்னி மற்றும் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கூட்டாக கண்டுபிடித்துள்ளனர். இந்த பசை ஊசி மூலம் காயத்துக்குள் செலுத்தப்படுகிறது.
6.    பிளாட் நைட் என்ற விண்கலம் நம் பூமியை 1300 ஆண்டுகளாக கண்காணித்து வருகிறது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
7.    தீவிரவாதத்திற்கு உதவுவதாக கூறி கடந்த 20 ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடான சூடான் மீது அமெரிக்கா விதித்திருந்த தடை தற்போது நீக்கப்பட உள்ளது.
தேசிய செய்திகள்
8.    தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் வகையில், 3 லட்சம் இளைஞர்களுக்கு ஜப்பானில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
9.    2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர்களும் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு, தில்லியில் இன்று(12-10-2017) தொடங்குகிறது.
10. இஸ்ரோ நிறுவனம் கார்டோசாட்-2 என்ற 3வது செயற்கைகோளை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வரும் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவ உள்ளது.
11. நேரடி பண பரிமாற்றம் மூலம் உர மானியம் அளிக்கும் திட்டத்தை முதல் கட்டமாக 7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
12. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை (குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700-ஆகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.2.25 லட்சம்) முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
13. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி டக் அவுட்டானார்.
14. 2019 ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதி சுற்றில் இந்தியா தகுதி பெற்றது.
15. இந்தியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தோடு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
16. மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல்களால் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அர்ஜென்டீனா தகுதி பெற்றது.
17. பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், ஹோண்டுராஸ், இங்கிலாந்து, இராக் அணிகள் முன்னோறி உள்ளன.
வர்த்தக செய்திகள்
18. பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுவான பாதைக்குக் கொண்டு சென்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
19. ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை முழுவதுமாக தனியாருக்கு விற்று விட வேண்டும் என்று விமான போக்குவரத்துத் துறையின் ஆலோசனை அமைப்பான சிஏபிஏ அரசுக்கு பரிந்;துரை செய்துள்ளது.
20. நேரடி வரி வருவாய் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 3.86 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது.
21. ஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரிவினய் துபேஅடுத்த ஆறு மாத காலத்துக்குள் 75 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
22. அதிக வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாக ரியல் எஸ்டேட் தொழில் விளங்குகிறது. இதன் காரணமாகவே இதை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்கு கொண்டு வருவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.


No comments:

Post a Comment