TNPSC Current Affairs 13th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
13.10.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    .நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விலகுவதாக அறிவித்துள்ளது.
2.    உலக அளவில் வளரும் நாடுகளில் பட்டினி அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2ம் இடத்தை பாகிஸ்தானும் பிடித்துள்ளது. இந்தியா 100வது இடத்தில் உள்ளது. (ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது).
3.    2017ம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா அக்டோபர் 14ம் தேதி யாழ்பானத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகிறது.
4.    கவிஞர் மன்றத்தின் சார்பில் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள்; சிங்கப்பூரில் நடைபெற்றது.
5.    2017ம் ஆண்டிற்கான உலக லேசார் கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
6.    அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ, 50வருட வளர்ச்சியை ஒரே வாரத்தில் அழித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
7.    அமெரிக்கா மற்றும் கனடா வர்த்தக ஒப்பந்தமான வடஅமெரிக்க சுதந்திர ஒப்பந்தத்தில் (NAFTA) பிரத்தானியா சேர உள்ளது.
தேசிய செய்திகள்
8.    மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் .பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி டெல்லியில்தூய்மைபசுமை ஓட்டத்தைதுணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைக்கிறார்.
9.    மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை(அக்டோபர் 02 2019) ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்கு ஒத்துழைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
10. முன்னாள் பிரதமர் தேவெ கௌடாதான் கடந்த வந்த அரசியல் பாதைகுறித்து நூல் எழுதியுள்ளார். நவம்பர் மாதம் இந்நூல் வெளிவரவுள்ளது.
11. தமிழ் இணைய கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை (“தமிழிணையம் மென்பொருள் தொகுப்பு – 2”) முதல் அமைச்சர் திறந்து வைத்தார்
12. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ..எஸ். அதிகாரியை தமிழக அரசு நியமித்து உள்ளது.
13. மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்க நேர்காணல் உள்ளிட்ட புதிய விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14. தமிழகத்தில் 2018-2019ம் ஆண்டு முதல் படிப்படியாக அனைத்து வகுப்பு பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் மேலும் பிளஸ் 1 துவங்கும் போதே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
15. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது 20 ஓவர் ஆட்டம் இன்று அக்டோபர் 13 ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
16. 10வது ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது
17. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 3 மூன்று இடங்களில் இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா இடம் பெற்றுள்ளன.
18. தாஷ்கண்ட சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரிதிவிஜ் சரண் ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
19. ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது.
20. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மற்றும், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
21. 17 வயதிற்குட்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மாலிக் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
22. சர்வதேச டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் லீக் தொடர்களை நடத்த .சிசி. ஒப்புதல் அளித்துள்ளது
வர்த்தக செய்திகள்
23. டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் 2015 ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
24. தொடர் இழப்பு, கடன் சுமை காரணமாக டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைகிறது.
25. எஸ்.பி.. (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, குறுகியகால மூலதன கடன் வழங்குவதற்கு, ‘எஸ்.எம்.. அசிஸ்ட்எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
26. நாட்டின் தொழில்துறை உற்பத்தி, 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது.
27. டி.சி.எஸ். எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 8.4 சதவீதம் உயர்ந்து, 6,446 கோடி அதிகரித்துள்ளது.
28. லஷ்மி விலாஸ் வங்கியின் நிகர லாபம் 84 சதவீதம் அதிகரித்துள்ளது.


Post a Comment