TNPSC Current Affairs 14th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
14.10.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    .நா.வின் யுனெஸ்கோ அமைப்பின் புதிய தவைராக பிரான்ஸின் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் Audrey Azoulay தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2.    ஐஸ்கீரிம் தயாரிப்பில் சீனா முதலிடத்தில் உள்ளது.
3.    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை(Fetna) மாநாடு 2018ம் ஆண்டு டல்லாஸ்(டெக்சாஸ் மாநிலம்) நடைபெறவுள்ளது.
4.    ஜேர்மனியின் Salzgitter நகருக்குள் அகதிகள் செல்ல அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.
5.    அணு ஆயுதமற்ற நாடு என்ற முறையில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் சேர முடியாது என்று .நா பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
6.    ஜப்பானில் நடைபெறும் கடற்படை ராணுவ கூட்டுப்பயிற்சியில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 2 கப்பல்கள் (.என்.எஸ். சத்புரா மற்றும் காத்மட்) ஈடுபட உள்ளன.
7.    மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 13ம் தேதி (நேற்று) ‘நோ ப்ரோ டேஅனுசரிக்கப்பட்டது.
8.    அமெரிக்கா, ஈரான் இடையே உள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
9.    உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை - ஸ்காட்லாந்து (வட கிழக்கு கடற்கரை)
10. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நிறைய தொண்டுகள் செய்துள்ளதால் (மறைந்த, உலகில் மிகப் பிரபலமான பெண்) டயனாவுக்கு Attitude பத்திரிக்கைசாதனையாளர் விருதைவழங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
11. தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
12. மத்திய அரசின் ஒரே பாரதம் என்ற இணையதளத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகள் இடம் பெற்றுள்ளன. (தமிழ் மொழி இடம் பெறவில்லை)
13. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் எவ்வித போராட்டங்களையும் மேற்கொள்ளக் கூடாது. மீறி போராட்டத்தில் ஈடுபடுவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14. லாஸ்பேட்டையில்(புதுச்சேரி) உள்ள அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோள் அரங்கத்தில், விண்வெளி தொடர்பான விளக்க கூட்டம் நடந்தது.
15. ப்ளுவேல் விளையாட்டை தடை செய்ய புதிய நிபுணர் குழுவை அமைத்து சிறப்பு மென் பொருளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
16. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் குறித்து தமிழக முதல்வர் பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
17. ரோஹிங்கயா இன மக்களை அக்டோபர் 21ம் தேதி வரை மியான் மருக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
18. மருத்துவப் படிப்பை முடித்து கிராமப்புறங்களில் ஒரு வருடம் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்ற உத்தரவை மீறி செயல்பட்ட 4,538 மருத்துவர்களின் அங்கீகாரத்தை மஹாராஷ்டிரா அரசாங்கம் ரத்து செய்தது.
19. தமிழகத்தில் உள்ள 94 தலைமை அஞ்சலகங்களிலும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதன்மை அஞ்சல்துறை தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.
20. இந்தியா - இலங்கை ராணுவம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 2013ம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறுவது 5வது பயிற்சியாகும் இது நேற்று (அக்டோபர் 13) புனேயில் தொடங்கியது. இதற்குமித்ர சக்திஎனப் பெயரிடப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
21. ஜுனியர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மணி அணி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
22. ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் வங்காளத் தேசத்தை வீழ்த்தியது.
23. 9 நாடுகள் பங்கேற்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டி லீக் ஆகியவற்றுக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.
24. எகிப்த்தில் நடைபெற்ற ஜுனியர் டேபிள் டென்னிஸ் ஓபனில், தமிழக வீராங்கனை செலினா செல்வகுமார் இடம் பெற்றிருந்த இந்தியாஎகிப்து அணி தங்கம் வென்றது.
25. ரஞ்சி கிரிக்கெட் தொடரில் இன்று தமிழகம் - திரிபுரா அணிகள் விளையாடுகின்றனர். இப்போட்டி சென்னையில் நடக்கிறது.
26. கோவையில் நடைபெற்ற இந்திய வேளான் ஆராய்ச்சிக் கழக நிறுவனங்களுக்கு இடையிலான தென் மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கொச்சி மத்தியக் கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் சாம்பியன் பட்டம் வென்றது.
27. சீனாவில் நடைபெறும் டியான்ஜின் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
வர்த்தக செய்திகள்
28. கோவையில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நவம்பர் 18ம் தேதி முதல் சிங்கப்பூர் மற்றும் புது டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்கவுள்ளது.
29. ஜுலைக்கு முன் வாங்கிய வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.
30. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.8,109 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
31. ஆதார் கட்டாயமாக்கப்பட்டு முறைக்கேடு தடுக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு 900 கோடி டாலர் மிச்சமாகி உள்ளது என இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்சாரா தலைவர் நந்தன் நிலகேணீ தெரிவித்துள்ளார்.
32. பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அதன் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனை (சிபிசிஎல்) தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை கைவிட்டுள்ளது.
33. நடப்பு நிதி ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் பல்வேறு பரஸ்பரநிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் ரூ.2.02 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளனர்.
34. இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) இரண்டாம் காலாண்டில் ரூ.6,446 கோடி லாபம் ஈட்டியுள்ளது.


Post a Comment