TNPSC Current Affairs 21st October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
21.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    சவுதி மற்றும் ஈராக் இடையே 27 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது.
2.    ஜப்பானை சேர்ந்தசெலீன்விண்கலம் நடத்திய ஆய்வின் மூலம், நிலவில் 50 கி.மீ நீளமுள்ள குகையை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
3.    உலகில் முதல் 3-டி பிரின்டட் பாலம் - நெதர்லாந்து (பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது)
4.    வடகொரியாவில் 1069 ரோபோக்கள்(ஆட்டிபிசியல் இண்டலிஜெண்ட் என்ற தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது) ஒன்றாக சேர்ந்து ஒரே மாதிரி நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
5.    விண்வெளி ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் செயற்கைகோள்கள் உட்பட பல பொருள்களின் கழிவுகள் அண்டவெளியில் காணப்படுவதால் அதனை அகற்றுவதற்காக ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.
6.    ஊடாடு தொழில்நுட்பத்தினைக்(Interactive technology) கொண்டு முகம் பார்க்கும் ஸ்மார்ட் கண்ணாடியை(பல அப்பிளிக்கேஷன் நிறுவும் வசதி) Strphen Bonnain உருவாக்கியுள்ளார்.
தேசிய செய்திகள்
7.    அக்டோபர் 21(இன்று) நாடு முழுவதும் காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது
8.    ரூ.10 செலவில் 10 நிமிடத்தில் மலேரியா காய்ச்சலை கண்டு பிடிக்கும் மொபைல் செயலியைசென்டார்கொல்கத்தா ஐஇஎம் இன்ஜீனியரிங் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
9.    தனியார்களின் கல்விச் சேர்க்கையை கண்காணிக்க மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மருத்துவ மாணவர்களுக்கு பிரத்யேக எண் வழங்கப்பட உள்ளது.
10. ஒடிசாவில் பைப்லைன் இயற்கை எரிவாயு திட்டத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
11. உத்தரப்பிரதேசத்தில் பணியின் போது உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை இரு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்நாத் தெரிவித்துள்ளார்.
12. தமிழகத்தில்பாரத் நெட்என்ற கிராம ஊராட்சிக்கான இணைய சேவை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 1,230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
13. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த இலவசப் பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
14. உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான பிரிவில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
15. ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த டிவில்லியர்ஸ் ஹசன் முதலிடத்தில் உள்ளார். (பேட்டிங்கில் விராட் கோலி 2வது இடம்).
16. டென் மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
17. ஆசிய கோப்பை ஹாக்கியில் இன்று(அக்டோபர் 21) இந்தியாபாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
18. ஜுனியர் உலக கோப்பை கால்பந்து காலிறுதி சுற்றில் கானாமாலி, அமெரிக்கா - இங்கிலாந்து அணிகள் இன்று(அக்டோபர் 21) மோதுகின்றனர்
19. இலங்கைக்கு எதிரான 4வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
வர்த்தக செய்திகள்
20. இந்தியாவில் மதிப்பு மிக்க பிராண்ட் பட்டியலை நியூயார்க்கின்சி அண்ட் டபிள்யூநிறுவனம் வெளியிட்டது. இதில் கூகுள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் அமேசான் முதலிடத்தில் உள்ளது.
21. வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
22. குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் புதிதாக கிரின்பீல்ட் விமான நிலையம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
23. சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் தனியார் வங்கிகளிலும் சேமிப்பு திட்டங்களை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
24. நாட்டின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்தன திரயோதசி தினத்தன்று’ (தீபாவளிக்கு முந்தைய தினம்) 3 லட்சம் வாகனங்களை விற்று சாதனைப் படைத்துள்ளது
25. ரூ. 1500 கோடி குறுகிய கால கடன் திரட்ட ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது


Post a Comment