TNPSC Current Affairs 17th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
17.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்பட்டியலில் லண்டன் முதலிடத்தில் உள்ளது.
2.    ஆஸ்ரியாவின் (Austria) பிரதமராகசெபஸ்டியன் குர்ஸ்(31)” தேர்வு செய்யப்பட்டார். இவர்உலகின் இளம் பிரதமர்என்ற பெருமையை பெற்றுள்ளார்
3.    தி டாவின்சி கோட்என்ற நாவலின் மூலம் உலக புகழ்பெற்றடேன் பிரவுனின்அடுத்த நாவல்ஆரிஜின்ஜெர்மனியில் வெளியிடப்பட்டுள்ளது.
4.    லண்டனைச் சேர்ந்த அக் ஷய் ரூபரேலியா(19) (இந்திய வம்சாவளி) இணையதளம் மூலமாக ரியல் எஸ்டேட் துவங்கினார். 12 மாதங்களில் ரூ.100 கோடி வணிகம் செய்துள்ளார். இதனால் இவர் பிரிட்டனின் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
5.    தங்கள் சொந்த சொத்துக்கள் விவரங்களை வெளியிடாத 261 மக்கள் பிரிதிநிதிகளை பாகிஸ்தான் தேர்தல் கமிஷன்சஸ்பெண்ட்செய்துள்ளது.
6.    பிரத்தானியா மற்றும் அயர்லாந்தைஒபிலியாஎன்ற சூறாவளி தாக்கியது.
7.    ஆவணங்கள் இல்லாத நிலையில் பிரான்ஸில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் நாடு கட்தப்படுவார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி மேன்ரான் தெரிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
8.    தமிழக அனுபவும் குறித்து முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ்அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள்என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டது.
9.    இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அதிகாரிகளின் 23வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலனுக்காக அரும்பணியாற்றிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு விருது மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.
10. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் 6 துறைகளில் (விளையாட்டு, சமூக சேவை, வணிகம், அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியம்) சிறந்து விளங்குவோருக்கு (21 பேர்) “மகுடம் விருதுவழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் நாசருக்குவாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கப்பட்டது.
11. இரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்கள் இனி 2000 ரூபாய் அபராதமும், ஆறு மாதம் சிறைதண்டனையும் அனுபவிக்க நேரிடும் என வடக்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
12. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க் கப்பலான ஐஎன்எஸ் கில்டன் இந்திய கடற்படையில் நேற்று(அக்டோபர் 16) இணைக்கப்பட்டது.
13. காஜ்ப்பூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி மின் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு இடிஎம்சி முடிவு செய்துள்ளது.
14. கோவை அருகே உள்ளதூமனூர்மலைக் கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
15. எகிப்த்தில் நடைபெற்ற ஜுனியர் மற்றும் கேடட் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை செலினா செல்வக்குமார் 3 தங்கப் பதக்கம் வென்றார்.
16. ஃபிஃபா(FIFA) U-17 கால்பந்து போட்டியில்எஸ்தர் ஸ்டப்லி’ (சுவிட்லர்லாந்து) முதல் பெண் நடுவராக பணிபுரிந்து சாதனைப் படைத்துள்ளார்.
17. சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி இரு இடங்கள் முன்னேறி 105 வது இடத்தில் உள்ளது.
18. 9வது பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானில் அக்டோபர் 28ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில்ராணி ராம்பால்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
19. இலங்கையில், தேசிய ரீதியில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் முதல் இடம் பிடித்தனர்
20. ஜுனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, அமெரிக்கா அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
வர்த்தக செய்திகள்
21. டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு நிறுவனமான விஸ்தாரா விமான சேவை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகலெஸ்லி டங்நியமிக்கப்பட்டுள்ளார்.
22. ஆப்பிள் நிறுவனம், ‘-வாலட்எனப்படும் மின்னணு பணப்பை சேவையில் இறங்க திட்டமிட்டுள்ளது.
23. ரிலையன்ஸ்நிப்பான் லைப் அசட் மேனஜ்மெண்ட் நிறுவனம்அக்டோபர் 25ம் தேதி பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட உள்ளது. இந்தியாவில் ஐபிஓ வெளியிடும் முதல் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்ரிலையன்ஸ் நிப்பான்ஆகும்
24. மத்திய அரசின் அந்நிய முதலீடு மேம்பாட்டு நிறுவனமானஇன்வெஸ்ட் இந்தியாநிறுவனம் இந்தியாவை முதலீட்டு மையமாக மாற்றுவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொழில் தொடங்க 200 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
25. தனியார்த் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
26. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை எண்ணுவதற்கு உயர் தொழில்நுட்ப வசதி கொண்ட 66 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.Post a Comment