TNPSC Current Affairs 5th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
05.10.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ரோபோக்கள்(எந்திர மனிதன்) மூலம் பார்லி, விதைத்து அறுவடை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.
2.    பிரான்ஸில் மாடல்களின் படங்களை தொழில்நுட்ப ரீதியாக மாற்றம்(Edit) செய்து போலி விளம்பரங்களை உருவாக்குவதை தடுக்க புதிய கட்டுபாட்டு விதிக்கப்பட்டுள்ளது. எடிட் செய்யப்பட்ட படங்கள் விளம்பரம் செய்யப்படும் போதுஇந்த படம் எடிட்செய்யப்பட்டுள்ளது என்று கீழே குறிப்பிட வேண்டும். இந்த விதியை மீறுபவர்களுக்கு 37500 யூரோக்கள் அல்லது விளம்பரம் எடுப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
3.    சீனாவின் தெற்குப் பகுதி நதிநீர் நிறைந்தும் வடக்கு பகுதி வறட்சியாகவும் காணப்படும். இந்த வறட்சியை போக்க தெற்கே உள்ள நதிநீரில் 10 பில்லியன் கனமீட்டர் தண்ணீரை வடபகுதிக்கு (பீஜிங் நகர்) திசை திருப்பி தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து சீனா சாதனைப் படைத்துள்ளது.
4.    கிரையோஎலக்ட்ரான்நுண்ணோக்கு முறையை உருவாக்கிய (ஜாக்குவஸ் டுபோஷே, ஜோசிம் ஃபிராங்க், ரிச்சர்ட் ஹெண்டர்ஸன்) மூன்று உயிரி வேதியியல் விஞ்ஞானிகளும் இந்த ஆண்டுக்கான(2017) வேதியியல் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
5.    துபாயில் இந்திய டிரைவரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய பெண்ணுக்கு(ஜாவஹெர் சயீப் அல் குமைத்தி) அரபு அரசு தைரியப் பெண் என்ற விருதை வழங்கியுள்ளது.
6.    தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெச் - 1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது.
7.    ஜிபூட்டி நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் சிங் ஆவார். வெளிநாட்டு அலுவலக அளவில் தொடர்ச்சியாக கலந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்த ஜிபோடியுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது.
8.    ஜப்பானில் கடந்த 2011ஆம் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபுகுஷிமா அணு உலைகளை மீண்டும் இயக்க, அந்த நாட்டின் அணுசக்தி அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
9.    ஸ்பெயினில் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான காடலோனியாவை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த நாட்டு மன்னர் பிலிப் நிராகரித்துள்ளார்.
தேசிய செய்திகள்
10. பீகார் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சத்யபால் மாலிக் நேற்று(அக்டோபர் 4) பதவியேற்றார்.
11. 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மரபுசாரா எரிசக்தித் திறன் இரு மடங்கைவிட அதிகமாக இருக்கும் என்று சர்வதேச மரபுசாரா எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.
12. குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்துக்கு ஜனசங்கத் தலைவர்களின் ஒருவரானதீனதயாள் உபத்யாவின்பெயரை சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
13. ஆந்திர பிரதேசத்தில் போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம் வரும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
14. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
15. நாடு முழுவதிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 9 மாதங்களில் 34 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தை தொடர்ந்து தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.
16. தமிழகம் முழுவதும் நான்கு லட்சம் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கும் சிறப்பு திட்டம்தொடுவானம் திட்டம்துவங்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
17. ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் (கிளைர் போலாசாக்) அம்பயர் களம் இறங்குகிறார்.
18. யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிகபட்சமாக 16 முறை அமெரிக்கா மற்றும் பிரேசில் பங்கேற்றுள்ளன.
19. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு 3 மாத ஊதியமாக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பிசிசிஐ வழங்கியுள்ளது.
20. ஏபிடி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் - ஸ்காட் லிப்ஸ்கி இணை, ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
21. டெல்லியில் நடைபெறும் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நிதின் குமார் சின்ஹா, பவா ஹத்தின் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்
22. ஆஸ்திரேலிய ஹாக்கி லீக் (ஏஹெச்எல்) போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியஅணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வர்த்தக செய்திகள்
23. பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவராக ரஜ்னீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
24. ரெப்போ விகிதத்தில் தற்போது உள்ள 6 சதவீதம் வட்டி விகிதமே தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
25. டிரஸ்ட் வைத்துள்ளவர்கள் மற்றும் அதிகப் பணம் வைத்துள்ள தனிநபர் மீது inheritance tax விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
26. கோதுமை மீதான இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
27. தூத்துக்குடியிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியாவிற்கு 32,500 டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
28. மத்திய அரசுசிங்கிள் பிராண்டுசில்லறை விற்பனை துறையில், ஐந்து நிறுவனங்களின்(ஓப்போ மெபைல்ஸ் இந்தியா, லூயிஸ் உட்டன் மாலிடையர், சும்பக் டிசைன், டேனியல் வெலிங்டன், அக்டோசெர்பா ஆக்டிவ் வோல்சேல்) அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.


Post a Comment