Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 7th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
07.10.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    அணு ஆயுத ஒழிப்புக்காக சர்வதேச அளவில் பிரசாரம் மேற்கொள்ளும்ஐகேன்தொண்டு நிறுவனத்துக்கு இந்த ஆண்டு(2017) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2.    இந்தியா மற்றும் 28 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் இடையேயான 14வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று (அக்டோபர் 06) நடைபெற்றது. இதில் பயங்கரவாதத்துக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் உறுதி அளித்துள்ளனர்.
3.    நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்
4.    ரியாத்தில்(சவுதி அரேபியா) நடைபெற்ற பிரம்மாண்ட சொகுசு கார் கண்காட்சியில் முதல் முறையாக பெண்கள் கலந்து கொண்டனர்.
5.    அமெரிக்காவின் சுரங்க ரயில் நடத்துனராக பணிபுரியும் முதல் இந்திய பெண் சுஜாதா கிட்லா.
6.    போர்ச்சுகலின் ஓபிடோஸ் நகரில்தி லிட்ரரி மேன் ஹோட்டல்உள்ளது. இதில் சுமார் 50000 புத்தக்கங்கள் வைக்கப்பட்டிருந்தது. இது உலகின் மிகச் சிறந்த விடுதி என்று புத்தகப் பிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
7.    மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பிய இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா இந்தியா வழங்கும் என்று வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
8.    அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
9.    தமிழக இரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
10. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக ஜோதி நிர்மலா சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
11. காணாமல் போன கடவுச்சீட்டைப் புதுப்பிக்க இணையதளம் மூலம் பெறப்பட்ட காணாமல் போனதற்கான ஆவணச் சான்றிதழ் (எல்டிஆர்) போதுமானது என்று மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
12. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையை பராமரிக்கும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
13. இந்தியாஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று(அக்டோபர் 07) நடக்கிறது.
14. ஜுனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி வெற்றிப் பெற்றது.
15. 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.
16. இந்தியாவிற்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்(காயம் காரணமாக) விலகியுள்ளார்.
17. சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாஷீய் பெங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
18. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வர்த்தக செய்திகள்
19. ரூ.50 ஆயிரத்துக்கும் மேல், நகை வாங்கபான் எண்சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது.
20. 2018 ஏப்ரல் 1 முதல் ஏற்றுமதியாளர்களுக்கு-வாலட்சேவை வழங்கப்படும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
21. கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
22. பல்வேறு நிறுவனங்கள் 13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ.4574 கோடி கறுப்பு பணத்தை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
23. லெனோவோ நிறுவனத்தின் புதியதின்க்பேட்சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வியாபார ரீதியிலான புதிய லேப்டாப்கள் முதன்முதலாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் டீசராக வெளியிடப்பட்டது.


Post a Comment