Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 8th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
08.10.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    19 நாடுகளைச் சேர்ந்த 24 மாற்றுதிறனாளி பெண்கள் கலந்து கொண்ட முதல்சக்கரநாற்காலி உலக அழகிப் போட்டிவார்ஸாவில்(போலந்து) நடைபெற்றது இதில் பெலாரஸ் நாட்டு மாணவி அலெக்சாண்ட்ரா சிசிகோவா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2.    பிரபல சோசலிஸ்ட்சே குவேராகொல்லப்பட்ட 50வது ஆண்டு நினைவு தினம் நேற்று(அக்டோபர் 08) கியூபாவில் அனுசரிக்கப்பட்டது.
3.    கம்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து(பாஸ்வேர்ட்) அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை நியூயார்க்கின் (அமெரிக்கா) யு.பி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
4.    ஜேர்மனி ஹம்பெர்க் நகரை சேவியர் புயல் தாக்கியது
5.    அக்டோபர் 9ம் தேதியான இன்று 48வதுஉலக அஞ்சல் தினம்”. உலகளவில் சீனாவின் தூதஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை முதலிடத்தில்(தொடர்ந்து 3 முறை) உள்ளது.
6.    அமெரிக்காவில் விண்ணெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா அனுப்பியஒடிசிசெயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் நிலவானபோபோசின்முதல் படத்தை அனுப்பியுள்ளது.
7.    பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 1890ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்று நடக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது
8.    அமெரிக்கா நாடுகளின் அழுத்தங்களை சமாளிக்கும் பொருட்டு அச்சுறுத்தும் பிளேக், ஆந்த்ராக்ஸ் போன்ற உயிரியல் ஆயுதங்களை வடகொரிய ராணுவம் தயாரித்து வருகிறது.
தேசிய செய்திகள்
9.    நாடு முழுவதும் 5000 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும்ஜிவாமிர்தம் திட்டத்தைகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று(அக்டோபர் 09) தொடங்கியுள்ளார்.
10. இந்திய விமானப் படையின் (இந்தியன் ஏர்ஃபோர்ஸ்) 85வது ஆண்டு விழா இன்று(அக்டோபர் 09) கொண்டாடப்பட்டது. (பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட இது ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என்று அழைக்கப்பட்டது)
11. தீபாவளிக்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்க, வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. (உலகின் அதிக மாசு கொண்ட மிகப்பெரிய நகரம் - டெல்லி)
12. விவசாயத்துக்கான மானிய யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலக்க மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். வேப்ப எண்ணெய் கலந்த யூரியா விவசாயத்திற்கு மட்டுமே பயன்படும் மேலும் கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியாது
13. சென்னை பல்கலைக்கழக பதிவாளராக(29வது) ராம. சீனுவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
14. இந்தியாவின் சர்வதேச அறிவியல் மாநாடு அக்டோபர் 13ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது என மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
15. நிலத்தடி நீரை பயன்படுத்த டிசம்பர் 31ம் தேதிக்குள் தடையில்லா சான்று (என்ஓசி) பெற்றால்தான், குடிநீர் நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து உரிமம் பெற முடியும் என மத்திய பாதுகாப்புத் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
16. மனநலப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதிஉலக மன நல தினமாகக்கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள்பணி இடத்தில் மனநலம்என்பதாகும்
17. சி.பி.எஸ். பள்ளிகளில் மும்மொழி கொள்கையின் கீழ் பாடங்கள் கற்றுதரப்படுகின்றன. இதில் தாய்மொழி அல்லது இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற ஏதாவது 3 மொழிகளில் பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அடுத்த கல்வியாண்டில் இருந்து பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் 4வது மற்றும் 5வது மொழிகளாகத்தான் இருக்க வேண்டும் அவை மும்மொழி பாடத்திட்டத்தின் கீழ் வராது என அறிவிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.. நிர்வாகத்திற்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
18. ஜப்பான் பார்முலா 1 கார்பந்தயத்தில் 16வது சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹால்மில்டன் முதலிடம் பிடித்துள்ளார்.
19. டோர்னமென்ட் பிளையர்ஸ்கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அஜீதேஷ் சந்து சாம்பியன் பட்டம் வென்றார். சந்து இந்த கோப்பையை வென்ற 2வது இந்தியர் ஆவார்.
20. சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
21. வங்காள தேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
22. அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க கோஸ்டா ரிகா அணி தகுதி பெற்றுள்ளது.
23. திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுமியர்களுக்கான கபடிப் போட்டியில் தருமபுரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வர்த்தக செய்திகள்
24. சரக்கு மற்றும் சேவை வரியில்(ஜிஎஸ்டி) தொகுப்பு முறை திட்டத்தை மறு ஆய்வு செய்ய அஸ்ஸாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்த் பிஸ்வ சர்மா தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
25. இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச்மற்றும்ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாநிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.12,300 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
26. கிளாடரிவேட் அனாலிட்டிக்ஸ்என்ற நிறுவனம் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெல்லக்கூடிய வாய்ப்புள்ள ஆறு பொருளாதார அறிஞர்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பெயர் இடம்பெற்றுள்ளது.
27. ஏற்றுமதியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை இன்னும் இரு மாதங்களில் திருப்பி வழங்கப்படும் என மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்திருக்கிறார்.
28. இலங்கையின் இந்த வருடத்திற்கான மிகச் சிறந்த தொழில் முனைவோர் என்ற விருது (2017 Sri Lanka of the Year) அபான்ஸ் குழுமத்தின் தலைவி திருமதி. “ஆபான் பெஸ்டோன் ஜிக்கு வழங்கப்பட்டது.
29. 2017ம் ஆண்டில் இணையதளம் மற்றும் தொழில்நுட்ப துறையில் இதுவரை 800 நிறுவனங்கள் மட்டுமே தொடக்க நிலை நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்)


Post a Comment