Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 11th December 2017

உலக செய்திகள் :
1.      சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு 2017 (தலைப்பு - ஒரே அகிலம்) பாரிஸில் (பிரான்ஸ்) நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் இந்தியாவின் சூரிய மின் திட்டம் விவாதிக்கப்படும் என்று உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தெரிவித்துள்ளார்
2.      நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில்கல்வி கண்காட்சி – 2017” துபாயில் நடைபெற்றது
3.      ஜெர்மனியில், விமானத்தின் வேகத்துடன் போட்டி போடும் அதிவேக இரயிலை Deutsche Bahn நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
4.      ஜப்பானில் அதிக நேரம் வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆளில்லா விமானத்தை (ட்ரோன் - கடைகள் மூடப்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப் பயன்படுத்தப்படும் பாடலானஆல்ட் லாங் சைன்இசைக்கப்படும்) ஜப்பானை சேர்ந்த நிறுவனம் உருவாக்கவுள்ளது
தேசிய செய்திகள்
5.      நாட்டின் முதல் கடற்படை விமான அருங்காட்சியகம் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2வது கடற்படை விமான அருங்காட்சியகம் மேற்கு வங்கத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்காகடியு – 142’ என்ற கடற்படை விமானம் மேற்கு வங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
6.      நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி முதல் 2018 ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 14 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
7.      தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பெண்களுக்கு எதிரான கூட்டுப் பாலியல் வன்முறை அதிகம் நடைபெற்ற மாநிலங்களை(2016) பட்டியலிட்டது இதில் ஹரியானா முதலிடத்தில்(தொடர்ந்து 3 முறை) உள்ளது
8.      இரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் தாமதமாகும் பட்சத்தில் அதுகுறித்து பயணிகளுக்கு, இரயில்வே சார்பில் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
9.      டெல்லியில் பெண் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வாடகை கார்களில் டிஜிட்டல் மானிட்டர்கள் (ஜிபிஎஸ் வசதி கொண்ட செல்போன்கள்) இணைக்கப்பட்டுள்ளன
விளையாட்டு செய்திகள்
10.  உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.
11.  ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்சிப் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்ஜிது ராய்’(ஆடவர் பிரிவு - இந்தியா) மற்றும்ஹீனா சித்து’ (மகளிர் பிரிவு - இந்தியா) வெண்கலப் பதக்கம் வென்றனர்
12.  டெஸ்ட், ஒரு நாள், டி20, என அனைத்து சர்வதேச போட்டிகளையும் சேர்த்து 16 ஆயிரம் ரன்களை கடந்தவர் - ‘மகேந்திர சிங் தோனி’(இந்திய அணியின் முன்னாள் கேப்டன்)
13.  பள்ளிகளுக்கு இடையேயான தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப் தொடரில் ஹரிதா((ஜுனியர் மகளிர் பிரிவில்) தங்கப் பதக்கமும், பாலமுருகன்(ஜுனியர் ஆடவர் பிரிவில்) வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர்
முக்கிய தினங்கள்
14.  டிசம்பர் 11 – யூனிசெப் தினம் (UNICEF – ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதி)
15.  டிசம்பர் 11 – சர்வதேச மலை தினம்
16.  டிசம்பர் 11 - இயற்பியலாளர் மேக்ஸ் பார்ன் பிறந்த நாள்(135)
விருதுகள்
17.  2017 அமைதிக்கான நோபல் பரிசு ஐகேன் அமைப்பின் தலைவர்பீட்ரைஸ் ஃபிஹ்னைக்கு’(அணு அயுத ஒழிப்பு பிரச்சாரம்) வழங்கப்பட்டுள்ளது
18.  வேளான் விஞ்ஞானிஎம்.எஸ் சுவாமிநாதனுக்கு’ 3 பல்கலைக்கழங்களின் சார்பில்(தமிழ்நாடு - வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம்) ‘ஏர் அறிஞர் விருதைதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்
வர்த்தக செய்திகள்
19.  டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதத்தில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது
20.  மத்திய அரசின் தங்கப் பத்திரம் நாளை வெளியிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.2,890 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
21.  டிசம்பர் மாத்தில் ரூ. 4000 கோடி அந்திய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறிவுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

22.  ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் உலக அளவில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்தும், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர் கொள்வது பற்றியும் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

No comments:

Post a Comment