Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 16th December 2017

உலக செய்திகள்
1.      உலகிலேயே முதல் முறையாக முழுவதுமாக டிஜிட்டல் வானொலிக்கு மாறிய நாடுநார்வே
2.      உலக வங்கி, 2019ம் ஆண்டிற்கு பின்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான ஆராய்ச்சிக்களுக்கான முதலீட்டு உதவிகளை நிறுத்த உள்ளது
3.      அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் 0.25 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.(இந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது)
4.      சவூதி அரேபியா அரசு தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் 2018ம் ஆண்டு 19.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்க உள்ளது
5.      ஈராக்கில், தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று கைது செய்யப்பட்ட 38 பேருக்கு ஒரே நாளில்(இன்று-டிசம்பர் 15) தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்டது
6.      விடுமுறையை கழிக்க சிறந்த இடம், 2017ல் கூகுளில் அதிக மக்களால் தேடப்பட்ட இடம் - Cape Verde (ஆப்பிரிக்கா)
7.      அமெரிக்கா, உலகத்திலேயே அதிக பொருட்செலவு கொண்ட தூதரகத்தை லண்டனில் கட்டி முடித்துள்ளது
தேசிய செய்திகள்
8.      உலக தெலுங்கு மாநாடு ஹைதராபாத்தில் இன்று(டிசம்பர் 15) தொடங்குகிறது
9.      கேரள மாநிலத்தில் சந்தன மரங்களைப் பாதுகாக்கும் பணியில் முதன்முறையாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
10.  நகர்புறங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
11.  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன், டிவி, மைக்ரோவேவ் அடுப்பு உள்ளிட்ட பொருள்களின் சுங்கவரியை 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது
12.  மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை 2020ம் ஆண்டு முதல் முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
13.  தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்மெஹீலி கோஷ்’(மேற்கு வங்காளம்) 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்
14.  இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக நரேந்தர் பத்ரா மற்றும் பொது செயலராக ராஜீவ் மேத்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
15.  இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை 100 சதவீதம் உயர்த்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது
16.  காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் (தென்னாப்பிரிக்கா) இன்று தொடங்குகிறது
வர்த்தக செய்திகள்
17.  பிங்என்ற தேடுதல் பொறியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது
18.  நாட்டில் தொலைபேசி (டெலிபோன்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.55 கோடி சரிந்துள்ளதாக டிராய் அறிவித்துள்ளது
19.  நாட்டின் பொது பண வீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது
20.  வெரிடாஸ் பைனான்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் மேம்பாட்டு நிதி நிறுவனமான சிடிசி குழுமத்தியிடம் இருந்து ரூ.120 கோடி நிதி திரட்டியுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
21.  சூரிய குடும்பத்தைப் போன்று 8 கோள்களை கொண்ட மற்றொரு குடும்பத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்
விருதுகள்
22.  திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்குஆற்றல் பாதுகாப்பிற்கான தேசிய விருதைகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
முக்கிய தினங்கள்
23.  டிசம்பர் 15 – சர்தார் வல்லபாய் பட்டேல்(1950) நினைவு தினம்
ஒப்பந்தம்
24.  சர்வதேச நாடுகளிடையே செய்யப்பட்ட கண்ணிவெடி அழிப்பு மற்றும் தடை ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது
25.  ஜெட் இன்ஜின்களுக்கான உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு டாடா குழுமம் மற்றும் எலெக்ட்ரிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது


No comments:

Post a Comment