Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 11th December 2017

உலக செய்திகள்
1.      .நா சபையின் எதிர்பை மீறி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் வடகொரியா மீது ஜப்பான் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது
2.      உலகிலேயே முதன்முறையாக ஒட்டகங்களுக்காக பிரத்யேக மருத்துவமனை துபாயில் திறக்கப்பட்டுள்ளது
3.      உலகில் கள்ளப்பணம் என கருதப்படும் பிட்காயின் விலை ஒரே ஆண்டில் 1700 சதவீதம்(17,752 டாலர்கள்) அதிகரித்துள்ளது.
4.      தென்கொரியாவில் வாரம் ஒரு நாள் (புதன் கிழமை) குடும்ப தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதன் கிழமைகளில் இரவு 7 மணிக்கு மேல் அலுவலகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது
5.      குழந்தை பெற்று கொள்ள ஊக்கத் தொகை வழங்கும் நாடு - ஹாங்காங்
6.      பிரான்ஸ் அரசு 2022ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அதிவேக இணையதள வசதியை அனைவருக்கும் கிடைக்க செய்யும் விதத்தில் € 100 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது
தேசிய செய்திகள்
7.      இந்தியாவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
8.      கங்கை நதி அருகே பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தேசிய பசுமைத் தீர்பாயம் தடை விதித்துள்ளது
9.      இரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் 5 ஆண்டுகள் வரை, ஒப்பந்தம் அடிப்படையில் பணி புரிவதற்கு இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது
10.  அடுத்த 5 ஆண்டுகளில் 38,000 கி.மீ தொலைவு இரயில் பாதையை மின்னணுமயமாக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது
11.  மத்திய அரசு 2018-2019ம் நிதியாண்டில் முதன் முறையாக தேசிய வேலை வாய்ப்பு கொள்கையை அறிவிக்க திட்டமிட்டுள்ளது
12.  மிசோரமில் 60 மெகாவாட் மின் உற்பத்தி கொண்டதுய்ரியால் புனல் நீர் மின்சார நிலையத்தைபிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்
13.  வங்கிகளில் புதிய கணக்குகளை தொடங்க ஆதார் எண்ணை கொடுக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது
14.  ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஸ் உள்ளிட்ட நகரங்களில் பிளாஷ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதி முறைகளை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
15.  ஜனவரி 2 முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்
16.  ஓலோ நிறுவனம்தங்களுடன் இணைந்து செயல்படும் வாகன ஓட்டுநர்கள் நோய்வாய்ப்படும் காலத்தில் ஒரு நாளுக்கு ரூ. 750 உதவித்தொகையாக வழங்கும் புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
17.  இந்தியாவில் சேவைகள் ஏற்றுமதி 8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
18.  தமிழ்நாட்டில் (உடன்குடியில்) அனல் மின் நிலையம் அமைக்கும் ஆர்டர்(ரூ.7300 கோடி) பெல் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது
19.  நாட்டின் ஏற்றுமதி நவம்பர் மாத்தில் ரூ.2,619 கோடி டாலராக (ரூ.1.70 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
20.  78 வது அகில இந்திய பல்கலைக்கழக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் சென்னை பல்கலைக்கழக வீரர் பி.எஸ். விஷ்ணு தங்கப்பதக்கம் வென்றார்
21.  ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புவதற்கு ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியுடன் (அடுத்த 5 ஆண்டுகளுக்கு) ரூ.16 ஆயிரத்து 347 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
22.  அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி 53 டி20 போட்டிகளில்(உள்ளுர் போட்டிகள் உட்பட) விளையாட உள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது
23.  அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராககிறிஸ்டியான் புலிசிக்தேர்வு செய்யப்பட்டுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
24.  மனித வியர்வையில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும்நூலிலை மின்கலன் உடை’(சியோகியுன்-அமெரிக்கா) தயாரிக்கப்பட்டுள்ளது
25.  வலியில்லாமல் மருந்தை உடலுக்குள் செலுத்தும்பிரைம்என்ற தொழில்நுட்பத்தைடகோமருத்துவ நிறுவனம்(ஜப்பான்) தயாரித்துள்ளது
புதிய நியமனம்
26.  காங்கிரஸ் கட்சியின் புதிய (87வது) தலைவராக ராகுல்காந்தி இன்று(டிசம்பர் 16) பதவியேற்றார்
முக்கிய தினங்கள்
27.  டிசம்பர் 16 - இந்தியாபாகிஸ்தான் (46வது) போர் வெற்றி தினம்(விஜய் தீவாஸ்)