Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 12th December 2017

உலக செய்திகள்
1.      சவுதி அரேபியாவில் 2018 மார்ச் முதல் சினிமா திரைபடங்கள் ஒளிபரப்புவதற்கு அனுமதி(35 ஆண்டுகளுக்கு பிறகு) அளிக்கப்பட்டுள்ளது
2.      அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஜனவரி 1 முதல் இவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று இராணுவ தலைமையகம்பென்டகன்தெரிவித்துள்ளது
3.      சுவிட்சர்லாந்து 30 வருடங்களுக்கு பின் அயல்நாட்டில்(பெய்ஜிங் - சீனா) பள்ளியை(அதிகாரபூர்வமாக) திறந்தது. இது சர்வதேச அளவில் சுவிஸ் தொடங்கிய 18வது பள்ளி ஆகும்.
4.      இலங்கை, சுவிட்சர்லாந்து இடையே நீண்ட தூர நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 2018ம் ஆண்டு முதல் இந்த விமான சேவை அமலுக்கு வருகிறது
5.      சீனாவில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புத்த கோயில் தீப்பிடித்து எரிந்தது
6.      அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது
தேசிய செய்திகள்
7.   அகமதாபாத்தில் (குஜராத்) நீர்வழி விமானம்(சபர்மதி ஆற்றில்) முதன் முறையாக இன்று(டிசம்பர் 12) இயக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்
8.      இந்தியாவில் முதன் முறையாக ஆப்கானிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கு(20 பேர்) பரங்கிமலையில(சென்னை) உள்ள இராணுவ பயிற்சி மையத்தில் பயற்சி அளிக்கப்படுகிறது
9.      தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
10.  பெற்றோரை பராமரிக்காத அரசு அதிகாரிகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து பெற்றோரின் கணக்கில் செலுத்த மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது
11.  டெல்லி ஆந்திர பவனில் ஐந்து மாநிலங்களின் கவர்னர்கள்(தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்) பங்கேற்ற சிறப்பு கூட்டம் நேற்று(டிசம்பர் 11) நடைபெற்றது
விளையாட்டு செய்திகள்
12.  10வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்சௌரவ் சௌதரி’(இந்தியா) தங்கப்பதக்கம்(10 மீட்டர் ஏர் ரைஃபிள், தனிநபர் மற்றும் குழு பிரிவில்) வென்றார்.
13.  10வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்மானு பாகெர்வெள்ளி (மகளிர் தனிநபர் பிரிவில்) வென்றார்
14.  டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக அறிமுகமாகும் ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராக 2019ல் விளையாட உள்ளது
15.  2023ம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது
16.  2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் 81 கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது
17.  டாக்டர் மகாலிங்கம் டிராபிக்கான ‘10வது சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டிஜனவரி 18ம் தேதி தொடங்குகிறது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
18.  பூமியின் சுழற்சி குறைந்து வருவதால் 2018ம் ஆண்டில் அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
வர்த்தக செய்திகள்
19.  கடல் வழி, வான் வழி, சாலைப் போக்குவரத்து இணைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆசியான் அமைப்புக்கு, இந்தியா 100 டாலர் நிதியுதவி அளிக்க இருப்பதாக நிதின் கட்கரி(மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்
20.  பொதுமக்களின் வங்கி டெபாசிட்டுகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பளிக்கும் என்று அருண் ஜெட்லி (மத்திய நிதி அமைச்சர்) தெரிவித்துள்ளார்
21.  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) அடுத்த ஆண்டில் 7.5 சதவீதமாக உயரும் என்று சர்வதேச முதலீட்டு வங்கியானநோமுராகணித்துள்ளது
நியமனம்
22.  போலந்து பிரதமராகமேத்யூஸ் மொராவெய்கிநேற்று (டிசம்பர் 11) பதவியேற்றார்
23.  பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரதீப் சிங் கரோலோ நேற்று பதவியேற்றார்
ஒப்பந்தம்
24.  பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக ஒருங்கிணைந்த கூட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகளும் தீர்மானித்துள்ளது
இரங்கல்
25.  இந்தியாவின் டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்ப தந்தையும் பிரபல விஞ்ஞானியுமானலால்கி சிங்காலமானார்.
முக்கிய தினங்கள்
26.  டிசம்பர் 11 – பிரணாப் முகர்ஜி(முன்னாள் குடியரசு தலைவர்) பிறந்த நாள்
27.  டிசம்பர் 12 – தேசிய ஒளிபரப்பு தினம், உலக நுரையீரல் தினம்


No comments:

Post a Comment