Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 13th December 2017

உலக செய்திகள்
1.   சீனாவில், பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகன விற்பனையை 2025ம் ஆண்டு முதல் நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது
2.   கலிபோர்னியாவில் (அமெரிக்கா) ‘தாமஸ்காட்டுத் தீ மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
3.   சிங்கப்பூரில் மக்கள் அரசு போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகமின்சார கார் பகிர்வு திட்டம்இன்று தொடங்கப்பட்டுள்ளது. ‘ப்ளுஎஸ்ஜிஎன்ற நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
4.   உலகில் முதல் மின்சார கார் பகிர்வு திட்டம் பாரீஸ், 2வது மின்சார கார் பகிர்வு திட்டம் சிங்கப்பூர்
5.   ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதிக்குழு(யூனிசெப் அமைப்பு) உலகம் முழுவதும் இணையதளம் பயன்பாடு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், உலக அளவில் இணையதள பயன்பாட்டில் பெண்களை விட ஆண்கள் 12 சதவீதம் முன்னிலை வகிக்கின்றனர் மற்றும் மூன்றில் ஒரு பங்கை சிறுவர்கள் பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
6.   அமெரிக்க விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் படி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவிற்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
தேசிய செய்திகள்
7.   சாலை விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனியார் மருத்துமனைகளில் அரசின் சார்பில் சிகிச்சை அளிக்கும் புதிய திட்டத்தை டெல்லி மாநில அரசு உருவாக்கியுள்ளது
8.   நாடு முழுவதும் இது வரை 14 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளன என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
9.   2018ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான வினாத்தாள் ஒரே மாதிரியாக தயாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது
10. இரயில்வேயில் ஓய்வுபெற்ற பிறகு, தொகுப்பூதியத்தில் பணியாற்றுவதற்கான வயது வரம்பு 62ல் இருந்து 65ஆக உயர்த்தப்பட்டுள்ளது
11. டிசம்பர் 31ம் தேதிக்குள், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத வங்கி கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்றுஉதய் அமைப்புதெரிவித்துள்ளது
வர்த்தக செய்திகள்
12. லெகடும் இன்ஸ்டிடியூட்(லண்டன்) வெளியிட்டுள்ள வளமான நாடுகள் பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது
13. அனைத்திந்திய அளவில் 10வதுபிளாஸ்டிக் இந்தியா 2018’ வர்த்தக கண்காட்சி பிப்ரவரி 7ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது
14. உலக அளவில் 4ஜி சேவை மற்றும் இணைய பயன்பாடு குறித்த ஆய்வை ஓக்லா என்ற நிறுவனம் வெளியிட்டது இதில் இந்தியா 109வது இடத்தில் உள்ளது. பிராப்பேண்ட் எனப்படும் கம்பி இணைய இணைப்பு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 76வது இடத்தில் உள்ளது
15. கூடுதலாக பணியாளர்களை தேர்வு செய்ய உள்ள நிறுவனங்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது
16. நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2.2 சதவீதமாக சரிவடைந்துள்ளது
17. நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.88 சதவீதமாக உயர்ந்துள்ளது
விளையாட்டு செய்திகள்
18. சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஆடவர் அணி 6வது இடத்தில் உள்ளது. இந்திய மகளிர் அணி 10வது இடத்தில் உள்ளது
19. 2021ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது
20. உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் போட்டி துபாயில் இன்று(டிசம்பர் 13) தொடங்குகிறது
21. ஐஐடி அணிகள் இடையேயான 52வது விளையாட்டு போட்டி, சென்னை ஐஐடி வளாகத்தில் டிசம்பர் 15ம் தேதி தொடங்குகிறது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
22. உலகிலேயே முதன் முதலாக காற்று சுத்திகரிப்பானை (மோல்குலே) ‘யோகி கோஸ்வாமி’ (பெங்களுரு) கண்டுபிடித்துள்ளார். 2017ம் ஆண்டிற்கான சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் இந்தமோல்குலேவும்இடம் பிடித்துள்ளது
23. சூரிய மண்டலத்தில்சுருட்டு வடிவில் விண்கல்ஒன்று பூமிக்கு அருகில் வந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
24. கார்டோசாட் 2 எஃப்செயற்கைக்கோள் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது
விருதுகள்
25. பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ராவுக்குஅன்னை தெரசா விருது’(சமூக நிதி பணிக்காக) வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
26. டிசம்பர் 13 – பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்(16வது)