உலக செய்திகள்
- அமெரிக்காவில் வேலை செய்து வரும் ஹெச்-1பி விசாதாரர்களின் துணையும் பணிபுரிய வழங்கப்பட்டு வந்த ஹெச்-4 விசாவை நிறுத்தவுள்ளதாக டொனால்ட் டிரம்ப் (அமெரிக்க அதிபர்) தெரிவித்துள்ளார்.
- சவுதி அரேபியாவில் வாகனங்கள் (டிரக்குகள், மோட்டார் சைக்கிள்) இயக்க பெண்களுக்கு அனுமதி வழங்க அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
- ஐ.நா. அமைப்பு புலம்பெயர் மக்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் உலகிலேயே இந்தியர்கள் தான் வெளிநாட்டிற்கு அதிகம் புலம் பெயர்ந்து இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
- 2018 ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு இடையேயும், ஒரே மாநிலத்திற்குள்ளும் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான மின்னணு பில் (இ வே பில்) அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வர்த்தக செய்திகள்
- இந்தியாவில் வரும் 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்;துள்ளார்.
- பல்வேறு காரணங்களால் முடங்கிய ரியல் எஸ்டேட் திட்டங்களை கையகப்படுத்த ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் (ஸ்ரீராம் குழுமம்) ரூ.1,600 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், முதல் நாளில் ஆடவர் பிரிவில் 10 தங்கப்பதக்கமும், 10 வெள்ளிப்பதக்கமும் இந்தியா வென்றுள்ளது.
- கொல்கத்தாவில் நடைபெற்ற “பிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ்” போட்டியில் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார்.
- தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் அஞ்சும் முட்கில் என்பவர் 2 தங்கம் வென்றுள்ளார்.
- துபாயில் நடக்கும் ‘டி-10’ லீக் போட்டியில் சேவாக் அணி வெற்றி பெற்றுள்ளது.
- இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியத்தை 100 சதவீதமாக உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது
முக்கிய தினங்கள்
- உலகின் முதல் விமானம் கண்டுபிடிக்கப்பட்டு 114 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி டிசம்பர் 17ம் தேதி ரைட் சகோதரர்கள் தினமாக கொண்டாடப்படும் என்று டொனால்ட் டிரம்ப் (அமெரிக்க அதிபர்) அறிவித்துள்ளார்.