Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 19th December 2017

உலக செய்திகள்
 1. மிஸ் இந்தியா - அமெரிக்கா 2017 அழகி போட்டியில் ஸ்ரீ ஷைனி(வாஷிங்டன்) தேர்வு செய்யப்பட்டார்
 2. சிலி அதிபர் தேர்தலில் செபாஸ்டியன் பினெரா(முன்னாள் அதிபர்) வெற்றி பெற்றுள்ளார்
 3. உலகிலேயே அதிக விலை(ரூ.2000 கோடி) கொண்ட வீட்டை(சாட்டியூ லூயிஸ் 14) சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் வாங்கியுள்ளார்
 4. பிரான்சில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘மம்முத்’ யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடியே 13 லட்சத்திற்கு ஏலம் போனது
 5. 2017ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை9 சதவீதம் குறைந்துள்ளது என அமெரிக்காவின் தேசிய சுற்றுலா மற்றும் பயண அலுவலகம் தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
 1. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பதிலாக வேறு இந்திய நபர் வாக்களிக்கும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
 2. இந்தியாவில் கிராமப்புற மேம்பாட்டுக்காக உலக வங்கியிடம் இருந்து மத்திய அரசு ரூ.4,500 கோடி கடன் பெற்றுள்ளது
 3. மத்திய பணிக்கொடை வழங்கல் சட்டத்தின் கீழ் பணிக்கொடை மற்றும் விடுப்பு குறித்த புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது
 4. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ.7,961 கோடி பணத்தை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது
 5. ஜனவரி 1 முதல் விவசாயிகள் மானிய விலையில் உரம் வாங்க ஆதார் கார்டு கட்டயம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது
 6. கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்களை அகற்ற (விபத்தின் போது ஏர்பேக் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் செயலிழப்பதால்) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
வர்த்தக செய்தகள்
 1. மொபைல் எண்ணை மாற்றாமலேயே வேறு நிறுவன சேவைக்கு மாறும் (எம்என்பி) செலவை ரூ.4 ஆக 80 சதவீதம் குறைக்க டிராய் திட்டமிட்டுள்ளது
 2. பணப்மதிப்பிழப்புக்கு பின் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட ரூ.5000 கோடி செலவாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 3. ஈராக் முதல் முறையாக58 கோடி டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு சப்ளை செய்துள்ளது
 4. 2020ம் ஆண்டுக்குள் மின்சார கார்களை அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. ஜெர்மனியில் நடைபெற்ற ஜுனியர் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய ஆடவர்கள் 11 பதக்கங்களை(6 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம்) வென்றுள்ளனர்
 2. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 5வது இடத்தில் உள்ளார்
 3. 40வது மாநில சப்ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டி விருதுநகரில் ஜனவரி 4ம் தேதி தொடங்குகிறது
 4. அண்ணா பல்கலைக்கழக அளவிலான மகளிருக்கான கூடைப்பந்துப் போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது
 5. துப்பாக்கி சுடுதல் போட்டியில் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைனளுக்கும் சமமான வாய்ப்பு கொடுக்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன
 6. ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டத்தில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த லியோனஸ் மெஸ்ஸிக்கு (பார்சிலோனா அணி) தங்க ஷூ விருது வழங்கப்பட்டது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய 3 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 3 பேர் அடங்கிய குழு (ஸ்காட் டிங்கில், அன்டன் ஷிகபிலரோவ், நோரிஷிகே கனாய்) சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு ரஷ்யாவின் ‘சோயுஸ் எம்எஸ் - 07’ விண்கலத்தில் சென்றுள்ளனர்
 2. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு இறந்த உடலை நீர் தகனம் செய்யும் ‘ரெசோமட்டர்’ இயந்திரத்தை சாண்டி சுல்லிவான்(இங்கிலாந்து) கண்டுபிடித்துள்ளார்
முக்கிய தினங்கள்
 1. டிசம்பர் 19 – சோவியத் யூனியனின் இரும்பு மனிதன் ஜோசஃப் ஸ்டாலின்(139 வது) பிறந்த நாள்
 2. டிசம்பர் 19 - கோவாவின் விடுதலை தினம்