Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 26th December 2017

உலக செய்திகள்
 1. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமலா நாட்டின் அதிபர் ஜிம்மி மாரலெஸ், இஸ்ரேலுக்கான தங்கள் நாட்டின் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்
 2. மின்டனாவ் (பிலிப்பைன்ஸ்) மாகாணத்தை ‘டெம்பின்’ புயல் தாக்கியது
 3. கனடா, வெனிசுலா நாட்டு தூதரக அதிகாரிகள் அனைவரையும் மொத்தமாக தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது
 4. சீனா, உலகிலேயே நிலம் மற்றும் நீரில் இயங்கக் கூடிய ஏஜி 600 என்ற மிகப் பெரிய விமானத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது
 5. சீனா அரசு கடந்த 2 வருடங்களில் 13000 இணையதளங்களையும், 1 கோடி மக்களின் சமூக வலைதள கணக்குக்களையும் முடக்கியுள்ளது(அதீத இணையதள பயன்பாடு, பொய்யான தகவல் மற்றும் மக்கள் தீய வழிக்கு செல்வதைக் தடுப்பதற்காக)
 6. அமெரிக்க அரசு ஈரான், ஈராக், சோமாலியா, சூடான், சிரியா, மற்றும் ஏமன் போன்ற 11 நாடுகளை சேர்ந்த அகதி மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது. இந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
தேசிய செய்திகள்
 1. 20 ஆண்டுகளுக்குப் பின் உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்
 2. 2015-16 நிதியாண்டில் 2 கோடி பேர் மட்டுமே வருமான வரியைச் செலுத்தி உள்ளனர் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது
 3. மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய பணிக் காலம், பணிப் பயன்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் ‘இ-எச்ஆர்எம்எஸ்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது
 4. 1975ம் ஆண்டு எமர்ஜென்சியை அமல்படுத்திய போது சிறையில் அடைப்பட்டவர்களுக்கு சுதந்திரபோராட்ட வீரர் அந்தஸ்து வழங்க மராட்டிய அரசு திட்டமிட்டுள்ளது
 5. அனைத்து அரசு சாரா தொண்டு நிறுவனங்களும்(என்ஜிஓ) அங்கீகரிக்கப்பட்ட 32 வங்கிகளில் இன்னும் ஒரு மாதத்துக்குள் கணக்கு தொடங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
 6. ஆக்ரா – கான்பூர்(உத்தரபிரதேசம்) மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்
 7. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புதிய நடத்தை நெறிமுறைகளும், விதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், செயல்பாடுகள் கொள்கைகளை விமர்சிக்கவும், குறை கூறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
 8. நாடு முழுவதும் 21 அணு உலைகள் தொடங்கப்படும் என்று அணுசக்தித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
வர்த்தக செய்திகள்
 1. 2016 – 17ல் ஏற்றுமதி செய்வதில் ஒடிசாவை முதன்மை மாநிலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 2. மத்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) ஆகியவை, இயற்கை எரிவாயுப் போக்குவரத்து மற்றும் விற்பனைத் துறையில் ஈடுபடவுள்ளது
 3. நவரத்தினங்கள் மற்றும் ஆபரண துறையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஏற்றுமதி சரிவடைந்துள்ளது
 4. டிசம்பரில் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து 7,300 கோடி ரூபாய் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளது
 5. மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. ஐசிசி, டுவென்டி-20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது
 2. ஐரோப்பிய கண்டத்தில் 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படும் ஆல்ஃப்ஸ் மலையில்(சுவிட்சர்லாந்து) கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் ஸ்மித், அப்ரிடி, சேவாக் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு ‘செயின்ட் மோரிஸ்’ தொடர் என்று பெயரிடப்பட்டுள்ளது
 3. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான டேரன் லேமன், 2019 ம் ஆண்டில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்
 4. 19 வயதிற்குட்பட்ட தமிழக கிரிக்கெட் அணிக்கு கவிமேகன் என்ற மாணவன் (கிருஷ்ணகிரி) தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 5. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய முயற்சியாக 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றது
 6. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. வானத்தில் வண்ண மயமான நட்சத்திர ஒளி பிழம்புகளை ‘ஹப்பிள்’ தொலைநோக்கி மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது
 2. மென்மையான மற்றும் மீள் தன்னை உடைய குண்டு துளைக்காத ஆடையை(2 படையிலான கிரபீன்களை கொண்டது) விசேட விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் குழு(நியூயார்க்) உருவாக்கியுள்ளனர்
புதிய நியமனம்
 1. இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக, ஜெய்ராம் தாக்குர் நாளை (டிசம்பர் 27) பதவியேற்கவுள்ளார்
முக்கிய தினங்கள்
 1. டிசம்பர் 26 – சுனாமி பேரலையின் நினைவு தினம்(13ம் ஆண்டு)

No comments:

Post a Comment