Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs For 27th December 2017

உலக செய்திகள்
 1. பாகிஸ்தானில் இருந்து தனிநாடு வேண்டும் என்று ‘பலுசிஸ்தான்’ மாகாண மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
 2. சீனா அரசு, திபெத்தில் ஹெலிகாப்டர் டூரிசத்துக்கு விதித்திருந்த தடையை ரத்து செய்துள்ளது
 3. துபாயில், ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள், வாகன வாடகை ஆகியவற்றிற்கு ஜனவரி 1 முதல் 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்படவுள்ளது
 4. சினாய் பிரதேசத்தில் (எகிப்து) பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த 15 தீவிரவாதிகளை அந்நாட்டு அரசு இன்று தூக்கிலிட்டது
 5. சீனா பட்டுப் பாதை வர்த்தகத்துக்கு மீண்டும் உயிருட்ட ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற பெயரில் சீனா புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதற்கான பிரமாண்ட துறைமுகத்தை குவாதர் நகரில்(பாகிஸ்தான்) அமைக்கவுள்ளது
 6. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை தொடர்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக சுவிட்சர்லாந்து அதிபர் Doris Leuthard தெரிவித்துள்ளார்
 7. ஜெர்மனியில் வசிக்கும் ஆதரவற்ற சிறார்களை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது
தேசிய செய்திகள்
 1. சர்வதேச பசி பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது என்று சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது
 2. புராதான நினைவு சின்னங்களை பாதுகாப்பதில் உத்தரபிரதேசம்(743), கர்நாடகா(506) மற்றும் தமிழகம்(413) ஆகிய மாநிலங்கள் 1, 2, 3வது இடத்தில் உள்ளது என மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது
 3. தமிழக நீர்ப்பாசன திட்ட நவீனமயமாக்கலுக்கு, உலக வங்கி ரூ.2,037.85 கோடி கடன் வழங்க உள்ளது
 4. உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்க்கு தலைமை தாங்கும் தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ விடுமுறையே எடுக்காமல் வழங்குகளை விசாரித்த முதல் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்
 5. ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை இன்னும் ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் அவ்வாறு தெரிவிக்காவிட்டால் பதவி உயர்வு ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
 6. அருகில் உள்ள நாடுகளின் எல்லைப் பகுதியை பகிர்ந்து கொள்ளும் 9 மாநிலங்களின் எல்லை பகுதியை மேம்படுத்த ரூ.167 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது
 7. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டார்னியர் 228 போர் விமானங்களை பயணிகள் விமானங்களாக இயக்குவதற்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது
 8. டெல்லியில் 20000 லிட்டருக்கு மேல் தண்ணீர் உபயோகிப்பவர்களிடம் வசூலிக்கப்படும் தொகை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று டெல்லி (டி.ஜே.பி) நீர் வாரியம் தெரிவித்துள்ளது
 9. இரயில்களில் ஜன்னலோர இருக்கைகள் மற்றும் சைடு பெர்த் போன்றவற்றிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது
வர்த்தக செய்திகள்
 1. வாட்சப் நிறுவனம் டிசம்பர் 31ம் தேதிக்குப் பின் சில ஸ்மார்ட் போன்களில்(பிளாக் பெரி ஓஎஸ், பிளாக் பெரி 10 மற்றும் நோக்கியா எஸ் 40) இயங்காது என்று தெரிவித்துள்ளது
 2. நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ரூ.80,808 கோடியாக உள்ளது
 3. பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வரா கடன் அளவினை குறைப்பதற்காக நட்டம் அளிக்கும் வங்கி கிளைகளை மூடுமாறு நிதி அமைச்சகம் வங்கி நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது
 4. வோடஃபோன் நிறுவனம், இந்தியாவில் ஓவர் எல்டிஇ(விஓஎல்டிஇ) சேவையை ஜனவரி 1 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது
 5. இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்திற்கு இந்தியாவில்(புதுடெல்லி) சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம்(IICC) அமைப்பதற்கான ரூ.3,335 கோடி ஒப்பந்தம் கிடைத்துள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது
 2. சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் மற்றும் 13 வயதிற்குட்பட்டோருக்கான ஜுனியர் செஸ் போட்டி மும்பையில் டிசம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. சர்வதேச விண்வெளி நிலையத்தில், சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்தில் 5 ஸ்டார் ஹோட்டலை(மருத்துவமனை, விடுதி மற்றும் வை-பை வசதியுடன்) கட்ட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு
 1. சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள்(வாங் லீ, முகமது ஆசிஃப், சலாஹுதின் ரப்பானி) சீனாவில் நேற்று சந்தித்தனர். இதில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடவும், தங்கள் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று உறுதி பூண்டுள்ளனர்
முக்கிய தினங்கள்
 1. டிசம்பர் 27 – மிர்ஸா காலிப்(உருது கவிஞர்) 220வது பிறந்த நாள்