Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs For 28th December 2017

உலக செய்திகள்
 1. ஐ.நா பொதுச் சபை ரூ.564 கோடியை ஐ.நா கொள்கை உருவாக்கம் மற்றும் பராமரிப்புக்காகவும், ரூ.46,000 கோடியை அமைதிப் பணிகளுக்காகவும் ஒதுக்கியுள்ளது
 2. இஸ்மதாபாத்தில்(பாகிஸ்தான்) புதிய இராணுவ தலைமையகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
 3. வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பொருப்பாற்றிய மூத்த அதிகாரிகள் இருவருக்கு (கிம் ஜாங் சிங் மற்றும் ரி பியாங் சோல்) அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது
 4. பிரேசில் தங்கள் நாட்டுக்கான வெனிசுலா தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது
 5. சவூதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என அந்நாட்டுதொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
 6. இலங்கையில் (தெற்கு ஆசிய அளவில்) தாய் மரண வீதம் குறைவான அளவு பதிவாகியுள்ளது என்று இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
 7. ஐ.நாவின் அடுத்த ஆண்டுக்கான(2018-19) பட்ஜெட் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா பட்ஜெட் பொது சபை தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
 1. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் பதிவாகிவுள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும் உள்ளது
 2. தேசிய அளவில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
 3. நாட்டில் இதுவரை5 லட்சம் மக்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 4. பாஸ்போர்ட் பெறும் போது கைவிரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என லோக் சபா இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்
 5. ஆந்திராவில் ரூ.149 கட்டணத்தில் இணையதளம் மற்றும் கேபிளுடன் கூடிய தொலைபேசி சேவையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்
 6. ஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைக்கப்பட உள்ளது
 7. ஆதார் அட்டையின் கீழ் சிறைக் கைதிகளையும் கொண்டு வர கேரள சிறைத்துறை முடிவு செய்துள்ளது
 8. குழந்தைகள் பாலியல் குற்றம் தொடர்பான 4, 694 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது
 9. பேஸ்புக் நிறுவனம், புதிதாக அக்கவுண்ட் உருவாக்கும் போது ஆதார் எண்களை இணைக்கும் (போலி அக்கவுண்ட்களை தவிர்க்க) முயற்சியில் ஈடுபட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
 1. 2017 டிசம்பர் மாதத்தில் எல்பிஜி இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில்(முதன் முறையாக) உள்ளது
 2. குரல்வழி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பக்கூடிய உலகிலேயே மிகச் சிறிய கைப்பேசி(Zanco Tiny T1) உருவாக்கப்பட்டுள்ளது
 3. பிபிஎப், என்எஸ்சி சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை2 சதவீதம் குறைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
 4. கடன் பத்திரங்கள் மூலம் ரூ.50000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. சென்னை ஹாக்கி சங்கத்தின் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்
 2. தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் (முதல் முறையாக இறுதிச் சுற்றில் 33 புள்ளிகளுடன்) அனிசா செய்யது(அரியானா) தங்கப் பதக்கம் வென்றார்
 3. செய்யது முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு விஜய் சங்கர் தலைமை தாங்குகிறார்
 4. சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் விராட்கோலி(இந்திய அணி) 3வது இடத்தில் உள்ளார்
விருதுகள்
 1. திரைப்பட பின்னணி பாடகி சித்ரா, கேரள அரசின் ‘ஹரிவராசனம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 2. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 3. உலகத்தையே கண்காணிக்கக்கூடிய மிகப் பெரிய தொலைநோக்கியை (வைட் பீல்ட் இன்ஃப்ராசெட் சர்வே டெலஸ்கோப்) விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
 4. வடகிழக்கு சீனாவில் நேற்று சூரியன் 3 பகுதிகளாக (வளிமண்டலத்தில் காணப்படும் அதிகப்படியான ஈரப்பதங்கள் மற்றும் மேகக் கூட்டங்கள் காரணமாக) காட்சியளித்தது
 5. ஜெர்மனியில் ‘புன்னீத் மூர்த்தி’ என்ற இந்தியர் உள்ள குழு எவ்விதமான மின்தடையும் இல்லாமல் செல்லக்கூடிய எலக்ட்ரான்களை அதிகுளிர் நிலையில் கண்டுபிடித்துள்ளனர்
 6. உடைந்தால் மிக எளிதாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவை(பாலிஈதர்-தியோரியஸ் என்ற பொருள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது) ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
முக்கிய தினங்கள்
 1. டிசம்பர் 27 – முதன் முதலாக தேசிய கீதம் பாடப்பட்ட நாள்(1911 – ஜன கண மன)
 2. டிசம்பர் 28 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்ட நாள் (1885)
 3. டிசம்பர் 28 – அருண் ஜெட்லி(மத்திய நிதி அமைச்சர்) பிறந்த நாள்