Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs For 29th December 2017

உலக செய்திகள்
1.      2018ம் ஆண்டு பொருளாதார முன்னேற்றம் அடையும் பெரிய நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தை எட்டும் என்று சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது
2.      பாரிஸ் மேட்ச் பத்திரிக்கை (2017)உலகில் பிரபலமான மனிதர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் போப் பிரான்ஸிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
3.      அமெரிக்க மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்து நடத்திய கருத்து வாக்கெடுப்பில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்
4.      இஸ்ரேல் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள இரயில் நிலையத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெயர் சூட்டப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் கட்ஸ் தெரிவித்துள்ளார்
5.      பாகிஸ்தான் சிறையில் இருந்து 145 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது
6.      ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபராக கான்ஸ்டான்டினோ சிவாங்கோ(முன்னாள் ராணுவ ஜெனரல்) நியமிக்கப்பட்டுள்ளார்
7.      இஸ்ரேல் நாட்டில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒமர் சயாக் என்ற சிறுவனின் நினைவாக 118 அடி உயரம் கொண்ட பிளாஸ்டிக் டவர் அமைத்து டெல் அவிவ் நகர மக்கள் உலக சாதனைப் படைத்துள்ளனர்
8.      தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சமையல் போட்டியில் இந்தியாவின் சமோசா மற்றும் சில்லி சிக்கன் ரெசிபி முதல் பரிசு பெற்றுள்ளது
9.      ஐரோப்பிய ஒன்றியத்தில் தூய்மை ஆற்றலை மக்களுக்கு விநியோகம் செய்வதில் பிரிட்டன் நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் 7வது இடத்தில் உள்ளது
தேசிய செய்திகள்
10. வேளாண் ஆராய்ச்சி இதழ்களைப் பதிவிறக்கம் செய்வதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நாட்டியிலேயே முதலிடம் பிடித்துள்ளது
11. எயிட்ஸ் நோய் தொற்று இல்லாத யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை மத்திய அரசு அறிவித்துள்ளது
12. டெல்லியில் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை காட்சிப்படுத்துவதற்கு(பொது மக்களை கவரும் வண்ணமாக) எஸ்டிஎம்சி தடை விதித்துள்ளது
13. அஸ்ஸாமில் அரசு பணிப்புரியும் ஊழியர்களின் பணிநேரம், காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்றப்பட்டுள்ளது
14. மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
15. தெலுங்கானா மாநிலத்தில் அரசின் புத்தாண்டு பரிசாக, விவசாயிகளுக்கு (டிசம்பர் 31ம் தேதி) 24 மணிநேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது என மாநில மின்வாரியம் அறிவித்துள்ளது
16. முஸ்லிம் சமூகத்தில் 3 முறை தலாக் என்று கூறி விவாகரத்து அளிக்கும் நடைமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது
17. 2030ம் ஆண்டுக்குள் 10000 கோடி டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை மட்டும் இறக்குமதி செய்யும் வகையில் மத்திய கொள்கைக் குழு திட்டமிட்டுள்ளது என்று நிதின் கட்கரி (மத்திய சாலை போக்குவரத்துத் துறை) தெரிவித்துள்ளார்
18. தமிழகத்தில் பெண் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்
19. தமிழக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
20. மார்ச் 2019ம் ஆண்டுக்குள் அனைத்து இல்லங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய மின்சார துறை தெரிவித்துள்ளது
வர்த்தக செய்திகள்
21. பிரிக்ஸ் நாடுகளின் வங்கி துறையில் அதிகளவில் வாராக்கடன் பெற்றுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது ஸ்பெயின் உள்ளிட்ட பி...ஜி.எஸ் நாடுகளில் வாராக்கடன் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது
22. இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான .ஆர்.சி.டி.சி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் குடிநீரை சுத்திகரித்து இரயில் பயணிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
23. .ஆர்.சி.டி.சி (இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்) தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைஇரயில் நீர்என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்கிறது
24. ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் முதலீடு செய்ய உள்ளது
25. 2017ம் ஆண்டும் தனியார் பங்கு மூலத்தனத்தில் அதிக அளவு முதலீடு ஈர்த்த நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப துறை முதலிடத்தில் உள்ளது
26. ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தை(ஆர்-காம்), ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்க உள்ளது
விளையாட்டு செய்திகள்
27. உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்(சவுதி அரேபியா) விஸ்வநாதன் ஆனந்த்(இந்தியா) சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்
28. பிரிஸ்பென் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ரஃபேல் நடால் விலகியுள்ளார்
29. ஐஎஸ்எல் கால்பந்து போட்டி புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது
30. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜுக்கு தெலுங்கானா அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது
31. புதுவை மற்றும் பிரெஞ்சு அரசு இணைந்து சர்வதேச பாய்மரப் படகு போட்டியை ஜனவரி 25 முதல் 28 வரை புதுவையில் நடத்தவுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
32. இடைமறித்து தாக்கும் ஏவுகணை(ஏஏடி), நேற்று ஒடிசாவில் சோதனை செய்யப்பட்டது. இதில் பிரித்திவி ஏவுகணையை இடைமறித்து தாக்கப்பட்டது
முக்கிய தினங்கள்
33. டிசம்பர் 28 – வணிக நோக்கில் சினிமா முதன் முதலில் திரையிடப்பட்ட நாள்(1895)
34. டிசம்பர் 29 – குப்பளி வெங்கடப்பா புட்டப்பா(கர்நாடக மாநில பாடலைப் எழுதியவர்) பிறந்த நாள்