TNPSC Tamil Current Affairs for 30th December 2017

உலக செய்திகள்
1.      லைபீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜார்ஜ் வேக்(முன்னாள் கால்பந்து வீரர்) வெற்றி பெற்றுள்ளார்
2.      உலகில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் குளிரான இடங்கள் பட்டியலில் ஒய்மியாகன்(ரஷ்யா) முதலிடத்தில் உள்ளது
3.      2017ம் ஆண்டில் ட்விட்டர் சமூக வலைதளத்தில்மன் கி பாத்’ (பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி) என்னும் வார்த்தை அதிக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது
4.      ஜெர்மன் அரசு, மக்களிடையே மின்சார பயன்பாட்டை பெருக்குவதற்காக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது
5.      தடை செய்யப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்த வடகொரிய கப்பல்களை(4) சர்வதேச துறைமுகங்களில் நுழைய .நா. பாதுகாப்பு சபை தடைவிதித்துள்ளது
6.      பிரத்தானியா கடந்த 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலக்கரி ஆற்றலுக்கு பதிலாக இந்த ஆண்டு புதுப்பிக்கதக்க ஆற்றலான காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார ஆற்றலை பயன்படுத்தியுள்ளது
தேசிய செய்திகள்
7.      இந்தியாவில் முதல் முறையாக ஹைதரபாத்தில்(தெலுங்கானா) நடமாடும் ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது
8.      நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் மற்றும் இரயில் நிலையங்களில் பிரதமரின்ஜன் அவ்ஷதிதிட்டத்தின் கீழ்ஜெனரிக்மருந்து விற்பனை நிலையங்கள் அமைக்க மத்திய சுகாதார துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது
9.      2016-17ல் தானிய கையிருப்பு 22.95 டன்னாக உயர்ந்துள்ளது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது
10. ஹைதரபாத்தில் பிச்சைக்காரர்கள் இருப்பது குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.500 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது
11. இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாக கமிட்டி தேர்தலில் சி..டி.யூ தொழிற் சங்கம் வெற்றி பெற்றுள்ளது
12. ஆதார் விவரங்களை பதிவு செய்யும் போது விதிமுறைகளை மீறியதாக 50 ஆயிரம் ஊழியர்களை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
13. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இராணுவ வீரர்ஜிது ராய்தங்கம்(ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல்) வென்றார்
14. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை வீரர் ஓம்கார் சிங் வெள்ளி(ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல்) வென்றுள்ளார்
15. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான ஜுனியர் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில்அர்ஜுன் சிங் சீமா’ (பஞ்சாப்) தங்கம் வென்றுள்ளார்.
16. 2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் சுஷில்குமார் தகுதி பெற்றுள்ளார்
17. ஸ்போர்ட்ஸ்டார்இதழ் புதிய வடிவமைப்புடன் வெளியாகி உள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
18. ஜனவரி (2018) மாதம், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 31 செயற்கை கோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவப்படவுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது
19. உலக நாடுகளில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளர்களில் 70 சதவீதம் பேர் தாய்நாட்டிக்கு திரும்பி உள்ளனர் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது
20. குறைந்த இடத்தில் பார்க்கிங் செய்து கொள்ளும் ரோபோ கார்களை (மடிக்கணிணி மடித்து வைப்பது போல் மடித்து கொள்ளலாம்) ஜப்பான் கண்டுபிடித்துள்ளது
விருதுகள்
21. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் அருண்குமார் பாதுரிக்கு, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துள்ளது


Post a Comment