Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 22nd January 2018

உலக செய்திகள்
  1. இந்தியாவில் தான் மேற்கொண்ட சுற்றுப்பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ தெரிவித்திருக்கிறார்.
  2. அமேசான் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் பிரிவு அமேசான் கோ என்ற பெயரில் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இன்று திறக்கப்படுகிறது.
  3. சீனாவின் கலாச்சார விழாவான விளக்கு திருவிழா முதன் முறையாக பிரான்ஸ் நாட்டில் காயலாகில் கொண்டாடப்பட்டது
தேசிய செய்திகள்
  1. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜுரிச் சென்றடைந்தார்.
  2. சர்வதேச அளவிலான பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா 20 ஆண்டுகளுக்கு பின் கலந்து கொள்கிறது
  3. இந்தியாவில் சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயத்தின் பேரில் இணைப்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என சி.ஐ.ஏ. முன்னாள் பணியாளரான எட்வர்டு ஸ்நோடென் வலியுறுத்தியுள்ளார்.
  4. அப்துல் கலாம் விண்வெளி விஞ்ஞானி என்றால், பிரதமர் நரேந்திர மோடி, சமூக விஞ்ஞானி என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
  5. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுதோறும் கழிப்பறைகள் கட்டியதில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் 2, 3வது இடத்தில் உள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர்
  2. சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் சூப்பர் லீக் பி பிரிவில் டெல்லி அணி வெற்றி பெற்றது
  3. இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் 5வது முறை கௌரவ் கில் வெற்றி பெற்றார்.
  4. தெற்கு மண்டல தேசிய எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தமிழக அணி சாம்பியன்; பட்டம் வென்றது
வர்த்தக செய்திகள்
  1. பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
ஒப்பந்தங்கள்
  1. எதிரிநாட்டு ஏவுகணைகளை நடுவானிலேயே கண்டறிந்து வழிமறித்து தாக்கும் அமைப்புகளை ரஷ்யாவிடமிருந்து 39 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
  2. பாதுகாப்பு துறையில் ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த இந்தியா மற்றும் ஜப்பான் முடிவு செய்துள்ளது


Post a Comment