TNPSC Tamil Current Affairs 04th January 2018

உலக செய்திகள்
1.      வடகொரியாதென்கொரியா எல்லையில் மீண்டும் ஹாட்லைன் போன் வசதியை துவக்ககிம் ஜோங் உன்” (வடகொரியா அதிபர்) உத்தரவிட்டுள்ளார்.
2.      அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த வெளிநாட்டினருக்கு வழங்கப்படும்ஹெச் 1 பிவிசா வழங்குவதில் அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் 5 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
3.      பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் (2050) சாக்லேட் (கோகோ மரங்கள்) அழிந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
4.      பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க இஸ்ரேல் நாட்டுடன் போடப்பட்டிருந்த ரூ.3,176 கோடி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
5.      அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியாக இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
6.      சமூக வலைதளமான பேஸ்புக்கில் 2017-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட எம்.பி.க்களில் பிரதமர் மோடியும், சச்சினும் முதல் இடம் பெற்றுள்ளனர்
7.      கடந்த 4 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வது உள்பட பாதுகாப்பு தொடர்பாக ரூ.2.40 லட்சம் கோடி மதிப்பிலான 187 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8.      ஸ்ரீநகர்-கார்கில்-லே” (ஜம்மு-காஷ்மீர்) பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் ரூ.6,809 கோடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
9.      பிரிட்டன் உதவியுடன் இந்தியாவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
10. 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் விபத்துகளை தடுப்பதற்காக இஸ்ரோ செயற்கைக்கோள் மூலமாக அனைத்து ரயில் இன்ஜின்களையும் இணைக்க உள்ளது.
11. ஹிமாச்சல பிரதேசத்தில், ரூ.1,350 கோடியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
12. இரயில் டிக்கெட் விற்பனை மூலம் கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.2,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய இரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
13. முண்ரோ (நியூசிலாந்து), டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்று சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
14. டோனியை பிசிசிஐ அமைப்புஏூவீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.
வர்த்தக செய்திகள்
15. 2018 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் 650 கிளைகளுடன் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்; பாங்க்” (IPPB) சேவையை துவங்க உள்ளதாக பாராளுமன்றத்தில் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
16. ஸ்மார்ட் ஃபோன்களில் டேட்டா பயன்படுத்தல் கடந்த 3 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ரவிசங்கர் பிரசாத் (மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.
17. ரூபாய் நோட்டு அச்சிடும்போது கடைப்பிடிக்கப்படும் ரகசியத் தன்மையில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் அச்சிடப்படும் என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
18. சீனாவின் விண்வெளி நிலையமான டியாங்காங்-1, 2016ம் ஆண்டில் விண்ணில் கட்டுப்பாட்டை இழந்ததால் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் பூமியில் விழக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்
19. சுஷ்மா சுவராஜ் (இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்) இன்று முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 3 நாடுளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
புதிய நியமனம்
20. தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகராஜிந்தர் கண்ணா” (இந்திய அரசின் உளவு அமைப்பான ரா-வின் முன்னாள் தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
21. ஜனவரி 3 – வேலு நாச்சியாரின் பிறந்த தினம்


Post a Comment