Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 07th January 2018

உலக செய்திகள்
 1. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று ஐஸ்லாந்து நாடு சட்டம் இயற்றியுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு சரிசமமான ஊதியம் வழங்கும் முதல் நாடு ஐஸ்லாந்து ஆகும்
 2. சீனா தனது 3வது விமானம் தாங்கிக் கப்பலை அதிநவீன அம்சங்களுடன் கட்டமைக்கத் தொடங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
 1. மேற்குவங்க அரசின் லோகாவை முதல்வர் மம்தா பானர்ஜி வெளிட்டுள்ளார்.
 2. பிராந்திய ராணுவத்தில் (டெரிடோரியல் ஆர்மி) பெண்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 3. உலக வங்கியின் ரூ.3,000 கோடி நிதியுதவியுடன் இந்தியாவில் திறன்மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அருண் ஜேட்லி (மத்திய நிதியமைச்சர்) தெரிவித்துள்ளார்.
 4. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில்5 சதவீதமாக சரியும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 5. 7வது தேசிய ஆண்கள் குத்துச்சண்டை போட்டி புதுச்சேரியில் நேற்று (5-1-2018) துவங்கியது.
விளையாட்டு செய்திகள்
 1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சோபர்ஸீடன் இணைந்து ஸ்டீவ் ஸ்மீத் (ஆஸ்திரேலிய கேப்டன்) 2-ம் இடம் பிடித்துள்ளார்.
 2. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று (5-1-2018) தொடங்கியது.
 3. இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து (தொடர் தோல்வி காரணமாக) திசாரா பெரேரா நீக்கப்பட்டுள்ளார்.
 4. சென்னை ஐ.பி.எல்., அணியின் பயிற்சியாளராக மைக்கேல் ஹசி (ஆஸ்திரேலியா) நியமிக்கப்பட்டுள்ளார்.
 5. 44-வது தேசிய சப்-ஜூனியர் மற்றும் மாநிலங்கள் இடையேயான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கஸிமா (தமிழகம்), மற்றும் சப்- ஜூனியர் மகளிர் ஒற்றையர் பிரிவில் ராதிகா (தமிழகம்) வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்
வர்த்தக செய்திகள்
 1. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ரூ.24,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 2. 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை வருகிற பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக அனந்த் குமார் (நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.
 3. 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பிளக்ஸி கட்டணம் (flexi fare scheme) மூலமாக 2017ம் ஆண்டு நவம்பர் வரை ரூ.671 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ராஜன் கோகெய்ன் (மத்திய ரயில்வே இணை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.
 4. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி வரும் நிதி ஆண்டில் 63 கோடி டன்னாக அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 5. நடப்பு நிதி ஆண்டான 2017-18ல் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம்3 சதவீதம் குறையும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 6. சேமிப்புக் கணக்கு பராமரிக்க வேண்டிய குறைந்த பட்ச சராசரி இருப்புத் தொகையை மேலும் குறைக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளதாக பிரவீன் குப்தா (நிர்வாக இயக்குநர்) தெரிவித்துள்ளார்.
 7. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி முதல் தொடங்குகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. ஜப்பானின் விவசாயிகள் தோலையும் சேர்த்து சாப்பிடக்கூடிய “மோங்கே” என்ற வாழைப் பழத்தை உருவாக்கியுள்ளனர்.
 2. இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப்களில் வைரஸ் தாக்கியுள்ளதாக குயிக் ஹீல் செக்யூரிட்டி லேப் நிறுவனம் (ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள் வழங்கும் கம்பெனி) தெரிவித்துள்ளது.
 3. எலியின் உடலில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தினை இண்டியானா (அமெரிக்கா) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர்.
 4. ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டையின் அளவு குறைந்து வருவதாக நாசா (அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்) தெரிவித்துள்ளது.
முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்
 1. பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 115 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் (சுகாதாரம், கல்வி, அடிப்படை உள் கட்டமைப்பு, விவசாயம், நீர் மற்றும் நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் பின்தங்கியோரை மேம்படுத்துவதற்கான முயற்சி) மேற்கொள்ள இருக்கிறார்.
ஒப்பந்தம்
 1. வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும், இந்தோனேஷியாவும் ஒப்புதல் அளித்துள்ளது.

No comments: