Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 08th January 2018

உலக செய்திகள்
1.      தென் சீனக் கடல் பகுதியில் ஹாங்காங்கின் சரக்குக் கப்பலும், பனாமா நாட்டு எண்ணெய் கப்பலும் ஒன்றோடொன்று மோதி தீ பற்றி எரிந்தது
2.      அமெரிக்கா பார்லிமென்டிற்கு அருணா மில்லர்(இந்திய வம்சாவளி பெண்) போட்டியிட உள்ளார்
3.      ஹபீஸ் சயத்தின் ஜமாத் உத் தவாஉள்ளிட்ட 72 பயங்கராவாத அமைப்புகளுக்கு நிதி வழங்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது
4.      பிரத்தானியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகளவான அமிலத்தன்மை கொண்ட பொருள்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது
5.      பிரான்ஸில் நடைபெற்ற சார்லி ஹெப்டோ தாக்குதலின்(2015- ஜனவரி7-9) 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
தேசிய செய்திகள்
6.      உயர் கல்வி சேருவதற்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது
7.      நாடு முழுவதும் 8500 இரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
8.      அகமதாபாத்தில்(குஜராத்) 29வது சர்வதேச பட்டம் விடும் போட்டியை முதல்வர் விஜய் ருபானி தொடங்கி வைத்தார்
9.      2018 ஆசியான் அமைப்பின் மாநாடு டெல்லியில் ஜனவரி 19ம் தேதி தொடங்குகிறது
10. டெல்லியில் ஜனவரி 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
11. பொது இடங்கள் மற்றும் மத வழிப்பாட்டு இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் ஒலிப் பெருக்கிகளைப் பயன்படுத்த த்திரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது
12. கட்டிட கலையில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நுட்பங்களை கண்டறிய புதிய படிப்பு காரக்பூர் ஐஐடி.யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
13. கோவையில் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கத் தொழிற்பேட்டை அமைப்பதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிர்மலா சீதாராமன்(மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.
14. முஸ்லீம்களின் ஹஜ் புனித பயணத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி கிடையாது என்ற 60 ஆண்டு கால நடைமுறைகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
15. உலக நாத்திகர் மாநாடு 2018 – திருச்சியில் நடைபெற்றது
வர்த்தக செய்திகள்
16. தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி அதன் 775வது கிளையை மேல்படப்பையில் (சென்னை) திறந்துள்ளது
17. கூடுதல் வரி மூலம் அரசுக்கு ரூ.38,000 கோடி வருமானம் வந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
18. பொதுத்துறை வங்கிகளில் ரூ.100 கோடி அல்லது அதற்கும் மேல் செலுத்த வேண்டி உள்ள வாராக்கடன் கணக்குகளின் எண்ணிக்கை 1,463 உள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
19. பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகளை -காமர்ஸ் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
20. 2021ம் ஆண்டில் தானியங்கி கார்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஹூஹ_ண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
21. டெல்லியில் தேசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டி ஜனவரி 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது
22. 46வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹரிணி(சென்னை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
23. மாநில அளவிலான கராத்தே போட்டியில் நாமக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
24. பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஹைதராபாத் ஹன்ட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது
25. சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும்’, ‘பெலின்டா பென்சிச்சும்’ 2001ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாகஹொப்மன் கிண்ணத்தைவென்றுள்ளனர்
26. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரானகெவின் பீற்றர்சன்இவ்வாண்டு இறுதியில் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்
27. மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் லைட் ஃப்ளைவெயிட் பிரிவில் தமிழகத்தின் கலைவாணிவெற்றி பெற்றுள்ளார்
அறிவியல் மற்றும்தொழில்நுட்பம்
28. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்(Artificial Intelligence) ஊடாக இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை கண்டறியும் முறையை பிரத்தானியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
இறப்பு செய்தி
29. நிலவில் கால் வைத்த நாசாவின் மூத்த விஞ்ஞானி ஜான் யங் காலமானார்