Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 17th January 2018

உலக செய்திகள்
 1. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் இந்தியா முதல்முறையாக பங்கேற்றது.
 2. தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தங்கள் நாட்டு வீரர்களை உற்சாகமூட்ட 230 நபர்களை கொண்ட ஊக்கமளிக்கும் குழுவை வடகொரியா அனுப்ப திட்டமிட்டுள்ளது
 3. வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக வான்கூவர் குழுவைச் சேர்ந்த சுமார் 20 நாடுகள் அமைப்பு கூடி ஆலோசனை நடத்தியது
 4. இலங்கையில் பெண்கள் மது வாங்குவதற்கும், விற்பதற்கும் மீண்டும் தடை விதிக்க அந்நாட்டு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
 5. குளிர்கால ஒலிம்பிக்கில், வட கொரியாவும், தென்கொரியாவும், ஒரே கொடியுடன் அணி வகுப்பில் கலந்துகொள்ளவுள்ளன.
 6. அமெரிக்காவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் விமானப்படையில் பணியாற்றும் இந்திய வம்சாவளிப் பெண் அனன்யா அரோரா வெற்றி பெற்றார்.
 7. SR71-ல் ஒருசில மாற்றங்களுடன் புதிய விமானத்தை தயாரிக்கிறது அமெரிக்காவை சேர்ந்த லாக்கீட் மார்ட்டின் நிறுவனம்
 8. மாயன் பழங்குடியின மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மிகப்பெரிய 347 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நீர்வழிக் குகை மெக்சிகோவில் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
 1. இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குஜராத்தில் சபர்மதி ஆஸ்திரமத்தை பார்வையிட்டதுடன், ஐ கிரியேட் மையத்தையும் தொடங்கி வைத்தார்.
 2. சுகோய் 30 ரக போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயணம் செய்தார்.
 3. கிராமப்புறங்களில் 14 முதல் 18 வயது கொண்ட இளைய தலைமுறையினரில் 36 சதவீதம் பேருக்கு, நாட்டின் தலைநகர் டெல்லி என்பது தெரியவில்லை
 4. திருப்பதியைப் போல சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கும் வசதிகள் செய்து தருவது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது
 5. ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளை தனிமைபடுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 6. இந்தியா - ஜப்பான் நாடுகளின் கடலோர காவல்படையின் கூட்டு பயிற்சி, சென்னை கடல் பகுதியில் நடைபெற்றது.
வர்த்தக செய்திகள்
 1. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ரூ.43 ஆயிரம் கோடி முதலீட்டிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
 2. மேற்கு வங்க மாநிலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆர்-ஜியோ இல்லாத தொழில்களில் ரு.5,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
 3. மொபிக்விக் வாலெட் நிறுவனத்தின்6 சதவீத பங்குகளை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.
 4. பதஞ்சலி நிறுவனம் இ-காமர்ஸ் மூலம் தங்களுடைய பொருட்களை ரூ.1000 கோடி வரை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது
 5. கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் பணங்களில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு ஒரே நாளில் 25 விழுக்காடு சரிந்துள்ளது.
 6. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மூலம்75லட்சம் கோடி ரூபாய் வருமானம்
 7. பள்ளிக்குழந்தைகளுக்கு வாரத்தின் இரண்டு நாட்களில் பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவற்றை போதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வாங்கி செய்திகள்
 1. 14 விதமாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவை, அவற்றை வங்கிகள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் முன்னிலை வீரர்கள் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (ஸ்விட்சர்லாந்து) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
 2. நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 3-வது சுற்றில் உலக சாம்பியனும், இந்திய வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.
ஒப்பந்தங்கள்
 1. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், லாஜிஸ்டிக்ஸ் பிரிவு இந்திய தொழிலகக் கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

No comments: