Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 18th January 2018

உலக செய்திகள்  
 1. ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பதற்கு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து மொய் விருந்து நடத்தி 25 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளனர்.
 2. அதிகமாக பெண் அரசியல்வாதிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் சர்வதேச அளவில் ருவாண்டா முதலிடத்தில் உள்ளது.
 3. பிரான்சில் உள்ள பிரான்ம நிறுவனம் நைட்ரஜன் வாயுவால் இயங்கும் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் விலை $9100.
 4. தனிமைப்படுத்தப்பட்ட மக்களை கண்காணிக்க 'டிரசே குரூச்சு' தலைமையில் பிரிட்டன் அரசு ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது.
 5. ரூ.3,547 கோடி மதிப்பில் துப்பாக்கிகளை வாங்க இந்திய இராணுவத்திற்கு மத்திய அரசு அனுமதி அழித்துத்துள்ளது
 6. டோக்லாமில் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிய சீனா.
 7. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மகாத்மா காந்தி பற்றிய டிஜிட்டல் கண்காட்சி வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
தேசிய செய்திகள்
 1. பயணச்சீட்டை முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்குக் கட்டணச் சலுகை அளிக்கலாம் என ரயில்வே வாரியத்துக்குக் கட்டண மறு ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
 2. அணு ஆயுதங்களை ஏந்தியபடி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் அக்னி 5 ஏவுகணையின் இறுதி சோதனை இன்று நடத்தப்பட்டுள்து.
 3. ஏப்ரல் 1ம் தேதி முதல் பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவியுடன், ஆபத்துதவி கோரும் பொத்தானும் பொருத்தப்பட வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
 4. சென்னையில் இராணுவ கண்கட்சியை பாதுகாப்பு துறை அமைச்சர் சுஸ்மா சுராஜ் தொடங்கிவைத்தார்.
 5. தமிழகத்தில் நவோதயப் பள்ளிகள் இல்லாதது துரதிருஷ்டமானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
 6. காஷ்மீர் அமர்நாத் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளில் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்
வர்த்தக செய்திகள்
 1. ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் இரண்டாவது கார்ப்பரேட் வளாகத்தை கட்டமைக்கப்போவதாகவும் இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
 2. 2040 ம் ஆண்டுக்குள் குறுகிய தொலைவு பயணங்களுக்கான விமானங்களை 100 விழுக்காடு மின்மயமாக்க நார்வே அரசு திட்டமிட்டுள்ளது.
 3. 29 கைவினைப் பொருட்களுக்கு GST வரியிலிருந்து விலக்கு மற்றும் 49 பொருட்களுக்கான வரியை குறைக்க GST கவுன்சில் முடிவு செய்துள்ளது.
 4. ஐநா பொருளாதார தடையை மீறி வடகொரியாவுக்கு செல்லும் சரக்கு கப்பலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வான்கூவர் அமைப்பின் கூட்டத்தில் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
 5. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ஏற்கெனவே ஏற்பட்ட 400 கோடி ரூபாய் இழப்பு ஈடு செய்யப்படாததால், புதிய 200 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் வைப்பதற்கு வங்கி ஏடிஎம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.
 6. ஜனவரி 15-ம் தேதி வரையிலான காலத்தில் நேரடி வரி வசூல்7 சதவீதம் உயர்ந்து ரூ.6.89 லட்சம் கோடியாக இருக்கிறது.
 7. அதானி குழுமம் மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.750 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
 8. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறை யாக 35000 புள்ளியைத் தொட்டது.
விளையாட்டு செய்திகள்
 1. 2017ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 2. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சேவல் பந்தயங்களில் ரூ. 400 கோடி வரை பந்தயங்கள் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.
 3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஒப்பந்தங்கள்
 1. சேலத்தில் போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்No comments:

Post a Comment