Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 19th January 2018

உலக செய்திகள்
 1. மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் மாற்றம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 2. லண்டனில் குளிர்கால விளக்குத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
 3. 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் எண் கட்டாயம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 4. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் 2 இளைனர்கள் மீட்கப்பட்டனர்.
 5. சிறுபான்மையினர் நல அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் லக்னோவில் நடைபெற்றது
தேசிய செய்திகள்
 1. விமானப் பயணத்தின் போது மொபைல் மற்றும் இணையதள சேவையை அனுமதிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைத்துள்ளது.
 2. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தைத் தொடங்கி வைத்தார்.
 3. பெற்றோர் யாரெனத் தெரியாத அனாதைகளுக்கு அரசு வேலையில் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க மகாராஷ்ட்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 4. ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் ஈரோடு உள்ளிட்ட மேலும் 9 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
 5. மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிடக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்-கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
வர்த்தக செய்திகள்
 1. நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட சுமார் 22 ஆயிரத்து 834 கார்களை திரும்பப் பெறப்போவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. டாக்டர் மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான 10வது ஓபன் இன்டர்நேஷனல் செஸ் போட்டி சென்னையில் தொடங்கியது
 2. உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது
 3. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ‘ஹசன் அலி’ ஐசிசியின் 2017ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. எட்டுவகையான புற்றுநோய்களை அவை பரவுவதற்கு முன்னரே கண்டறியும் கேன்சர் செக் எனப்படும் புதுவகை ரத்தச் சோதனை முறையை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 2. விண்வெளிக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான அணுமின் உற்பத்தி கலன் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக நாசா(NASA) தெரிவித்துள்ளது.
 3. 2002 AJ129 என்று பெயரிடப்பட்டுள்ள மிகப்பெரிய விண்கல் ஒன்று வரும் பிப்ரவரி 4ம் தேதி பூமிக்கு மிக அருகாமையில் வர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
 4. அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ஆம் ஆண்டு இருந்ததாக உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தங்கள்
 1. ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஏ380வகையில் இருபது விமானங்களை வாங்குவதற்கு எமிரேட்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
நியமனங்கள்
 1. ரோமானியாவின் புதிய பிரதமராக ‘வியோரிக்கா தான்சில்லா’ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ரோமானியாவின் முதல் பெண் பிரதமராவார்
 2. சீக்கிய மதத்தை சேர்ந்த குர்பீர் எஸ் கிரேவால் முதல் முறையாக அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்
 3. புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார். இவர் 22வது தலைமை தேர்தல் ஆணையராவர்.
இரங்கல்
 1. கன்னட நடிகரும் இயக்குனருமான காசி நாத் காலமானார்.

No comments:

Post a Comment