Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 20th January 2018

உலக செய்திகள்
 1. சீனா எல்லைக்குள் அமெரிக்க போர்க்கப்பல் வந்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
 2. அமெரிக்காவில் இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் சட்டத்தை புதுப்பிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
 3. தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்தால் அதனுடன் இணைந்து செயல்பட முடியாது என அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் ஜான் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
 4. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளால் அச்சுறுத்தல் அதிகரிப்பதால், போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மாட்டிஸ் கூறி உள்ளார்.
 5. உலகில் அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது
தேசிய செய்திகள்
 1. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் மசோதா கொண்டு வரப்படும் என ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
 2. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை உதவிச் செயலராக இந்திய வம்சாவளிப் பெண்ணான மனீஷா சிங் பதவியேற்றுக்கொண்டார்.
 3. ல் அண்ட் டி நிறுவனத்தால் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள விஜயா என்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரோந்துக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 4. இந்திய சுகாதாரக் கூட்டமைப்பான ‘NAT HEALTH’ அனைவருக்கும் கட்டாய மருத்துவக் காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யவுள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. கொலம்பியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை பாராகிளைடிங் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் மைக்கேல் சிகல் ((Michael Sigel)) சாம்பியன் பட்டம் வென்றார்.
 2. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜே.பி.டுமினி ((Jean-Paul Duminy)) ஒரு ஓவரில் 37 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
வர்த்தக செய்திகள்
 1. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை 36ஆயிரத்து 915கோடி ரூபாய்க்கு அரசுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி வாங்க உள்ளது.
 2. பொறியியல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்ததால், நாட்டின் ஏற்றுமதி விகிதம்36ஆக அதிகரித்துள்ளது.
 3. இந்தியாவில் நேரடி முதலீடு செய்யும் வெளிநாடுகளின் பட்டியலில் மொரீசியஸ் முதலிடத்தில் உள்ளது. மொரீசியஸ் 5லட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 3 லட்சத்து 85ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இரண்டாமிடத்தில் உள்ளது. பிரிட்டன் 3லட்சத்து 38ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து மூன்றாமிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 2லட்சத்து 37ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து நான்காம் இடத்தில் உள்ளது. ஜப்பான் 2லட்சத்து 17ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஐந்தாமிடத்தில் உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் டார்வினின் கோட்பாடு அறிவியல்பூர்வமாக தவறானது என மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் கூறியுள்ளார்.
வாங்கி செய்திகள்
 1. பிட்காயின் பரிமாற்ற நிறுவனங்களின் கணக்குகளை முன்னணி வங்கிகள் முடக்கியுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பேங்க் ஆகியன தங்களிடம் நடப்புக் கணக்கு வைத்துள்ள பிட்காயின் பரிமாற்ற நிறுவனங்களிடம் அவை வணிகம் செய்யும் அளவுக்குப் பிணைத்தொகை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தன.
நியமனங்கள்
 1. குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment