Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 21th January 2018

உலக செய்திகள்
 1. உலகில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமான சைபீரிய சிறுத்தை பல ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 2. துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான பனிச்சறுக்கு போட்டிகள்.
 3. சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இடிலிப் அருகே உள்ள விமான நிலையத்தை அரசுப் படைகள் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
 4. எல்லையில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறி, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அரசு 5வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
 5. மத்திய பட்ஜெட்டில் சாலை திட்டப் பணிகளுக்காக50 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
 1. ரயிலில் முன்பதிவு செய்தும் இருக்கை வழங்கப்படாததால் மைசூரைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு 37 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
 2. எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க இஸ்ரோ தனது லித்தியம் அயன் lithium-ion பேட்டரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என மத்திய அமைச்சரவைச் செயலாளர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
 3. சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற உள்ள உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
 4. புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆய்வு செய்தார்.
 5. எல்லைக்குள் மட்டும் அல்லாமல், எல்லைக்கு அப்பாலும் சென்று எதிரிகளை வீழ்த்துவோம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 6. தாளில் அச்சிடப்படும் லாட்டரிச் சீட்டுக்குப் பதிலாக ஆன்லைன் லாட்டரியைத் தொடங்குவது குறித்து மகாராஷ்டிர மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
 7. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துமாறு மாநில அரசுகளை மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார்.
 8. இந்தியாவின் தேவைகளுக்கேற்ற வகையில் பிரத்யேக போர்விமானங்கள் தயாரிப்பது தொடர்பான யோசனையை அமெரிக்க நிறுவனமான Lockheed Martin வழங்கியுள்ளது.
 9. பாரதத்தின் வீரர்கள் என்ற தலைப்பில் ராணுவத்திற்கான அதிகாரப்பூர்வ கீதத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார்
வர்த்தக செய்திகள்
 1. இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பெரும்பான்மைப் பங்குகளை ஓஎன்ஜிசி கையகப்படுத்தினாலும், அதன் தனித்துவ அடையாளம் காக்கப்படும் என ஓஎன்ஜிசி தலைவர் சசி சங்கர் தெரிவித்துள்ளார்.இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் 51% பங்குகளை வாங்கும் ONGC
விளையாட்டு செய்திகள்
 1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
 2. பார்வையற்றோர்க்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
 3. புது டெல்லியில் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை 2017-18 போட்டியில் கர்நாடகாவை கிரிஷ் ஆர்.கௌடா தங்கப் பதக்கம் வென்றார்.
 4. தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய ரயில்வேயை தமிழகம் வீழ்த்தியுள்ளது.
 5. அமெரிக்க தடகள வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 60 மீட்டர் உள்ளரங்கு ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
 6. ஜீனியர் உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி கனடாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றார்.
நியமனங்கள்
 1. புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் பொறுப்பேற்கவுள்ளார்.

No comments: