Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 23rd January 2018

உலக செய்திகள்
 1. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாஷிங்மெஷின், சோலார் பேனல்கள் ஆகியவற்றிக்கு சுங்க வரியை அமெரிக்கா நிர்ணயித்திருப்பதால் ஆசிய கண்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பேரச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றன.
 2. தீவிரவாதம், பருவநிலை மாற்றம், பாதுகாப்பு, அமைதி உள்ளிட்ட அம்சங்களை முன்னிறுத்தி, உலகப் பொருளாதார மாநாட்டின் 48ஆவது விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
 3. சுவிட்சர்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் Alain Berset-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 4. அமெரிக்காவின் வரிக்குறைப்பு நடவடிக்கைகளால் வரவிருக்கும் நிதியாண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது.
 5. உலக பொருளாதார அமைப்பு மக்களின் வாழ்க்கை தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியா 62வது இடத்தில் உள்ளது. நார்வே முதலிடத்தில் உள்ளது
 6. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்டை – டை ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் கார்பிக்ஸ் தொழில்நுட்பத்தை உலகின் முதல் முறையாக ஐஸ்லாந்து நாட்டில் நிறுவியுள்ளது.
 7. கிழக்கு ஜெருசலேம் நகரை பாலஸ்தீனம் நாட்டின் தலைநகராக்கும் அதிபர் ‘ஹஹ்மூத் அப்பாஸின்’ முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
 1. இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கக் கூடாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 2. குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாட்டையில், முப்படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
 3. கர்நாடகாவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 18 மாவட்டங்களில் 100 சதவீத கழிவறைகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது
 4. ஆதார் எண்ணுடன், வாக்காளர் அட்டையும் இணைக்க வேண்டும் என்று புதிய தலைமை தேர்தல் அதிகாரி ஓம். பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்
 5. பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் செல் போன் உபயோகிக்க பஞ்சாப் ஃபரிட்கோட் மாவட்ட கல்வி வாரியம் தடை விதித்துள்ளது.
 6. ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக்கான் கௌரவிக்கப்பட்டார்.
 7. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச எல்லையருகே இந்தியப் படைகள் 9 ஆயிரம் பீரங்கிக் குண்டுகளால் தாக்குதல் தொடுத்தன.
 8. சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வர்த்தக செய்திகள்   
 1. உள்ளடக்கிய வளர்ச்சி குறியீட்டில் இந்தியா அதன் அண்டைநாடுகளான பாகிஸ்தான், சீனா உள்ளிட்டவற்றைக் காட்டிலும் பின்தங்கியிருப்பதாக உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 2. 11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
 3. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018-ம் ஆண்டில்4 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது.
 4. வங்கிகளின் வாராக் கடன் அளவு மார்ச் மாத இறுதிக்குள் ரூ. 9.5 லட்சம் கோடியாக உயரும் என்று தொழில் கூட்டமைப்பான அசோசேம் மற்றும் தரச்சான்று நிறுவனமான கிரிசில் இணைந்து நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
விளையாட்டு செய்திகள்
 1. ஸ்வீடனில் நடைபெற்ற ஜுனியர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ‘சித்தார்த் சிங்’ வெற்றி பெற்றார்
 2. 2018ம் ஆண்டு 11ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 27ம் வரை நடைபெறுகிறது
 3. இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் உலக டூர் பாட்மிண்டன் போட்டி ஜகார்ந்தா நகரில் இன்று தொடங்குகிறது
நியமனங்கள்
 1. லைபீரியாவின் அதிபராக முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர் ஜார்ஜ் வியோ பதவியேற்றார்
 2. குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்தி பென் பட்டேல் மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.
 3. டுவென்டி -20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ‘டேவிட் வார்னர்’ நியமிக்கப்பட்டுள்ளார்

No comments: