Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 25th January 2018

உலக செய்திகள்
 1. கிழக்காசிய கடல் பகுதியில் அமைதியை நிலை நிறுத்த, ஏசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 2. ஆஸ்திரேலியா குரூப் எனப்படும் அணுசக்தி குழுவில் இந்தியா இணைந்துள்ளது.
 3. இந்தியா சுற்று சூழல் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் 117வது இடத்தில் உள்ளது.
 4. வரி ஏய்ப்பு நாடுகள் என்ற கருப்பு பட்டியலில் இருந்து பனாமா, ஐக்கிய அரபு அமீரகம், துனிசியா, மங்கோலியா, மக்காவ், கிரினடா, பார்படாஸ் உள்ளிட்ட 8 நாடுகளை, ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.
 5. ஆஸ்கர் திரைப்பட விருதில் சிறந்த ஆவணப் படத்துக்கான இயக்குநர் பிரிவில் முதல் முறையாக யான்சி ஃபோர்ட் என்ற திருநங்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளர்.
 6. எல்லை தாண்டுவதாக பிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல்5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
தேசிய செய்திகள்
 1. நாட்டின் அதிவேக காதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணையாக மும்பையில் புறநகர் ரயிலை இயக்குவதற்காக கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே செய்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதற்காக செலவு செய்த ரூ.60 கோடியும் வீணாகிப்போனது.
 2. மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் 15 ஆயிரம் மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டில்46 கோடி சூரிய நமஸ்காரங்கள் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
 3. நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், 18 வயது நிரம்பிய இளைஞர்கள் “தேர்தலில் வாக்களிப்பேன்” என்ற உறுதி மொழியை ஏற்கும் விதத்தில் புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.
 4. தமிழகத்தில் தஞ்சை - சென்னை விமான வழித்தடம் உட்பட நாடு முழுவதும் 325 புதிய விமான மற்றும் ஹெலிகாப்டர் இயக்க வழித்தடங்களை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 5. டெல்லியில் இன்று ஆசியான் மாநாடு தொடங்குகிறது
 6. 1950, ஜனவரி 24ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. 68 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த தினத்தை உத்திரப்பிரதேச அரசு கொண்டாடியது.
 7. என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிமுகப்படுத்தினார். இதன்படி படிக்கும் காலத்தில் நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
 8. இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையினர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தங்களது சிறப்பு படைகளுடன் பங்கேற்க உள்ளனர்.
 9. மத்தியப்பிரதேசத்தில் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண்களுக்கு பதிலாக ‘ஸ்மைலி’ படங்கள் மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. 2017டிசம்பரில் சரக்கு சேவை வரியாக 86ஆயிரத்து 703கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது
 2. 400 டி-20 போட்டிகளில் விளையாடிய உலகின் ஒரே கிரிக்கெட் வீரர் - பொல்லார்டு(மேற்கிந்திய தீவுகள்)
 3. கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படுபவர் - சச்சின் டெண்டுல்கர்
 4. சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகையை முதல் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. உலகிலேயே முதல்முறையாக குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
 2. உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவை விட பெரிய அபாயகரமான விண்கல் ஒன்று இன்னும் 10 நாட்களுக்குள் பூமியின் அருகாமையில் கடந்து செல்ல இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது
விருதுகள்
 1. 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது.

No comments:

Post a Comment