Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 27th January 2018

உலக செய்திகள்
  1. துபாயில் மிகப் பெரிய கோப்பையில் டீ தயாரித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தச் சாதனைக்காக 3 புள்ளி 66 மீட்டர் உயரமும், ஒன்று புள்ளி 42 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்டமான கோப்பை தயாரிக்கப்பட்டது.
  2. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியல் கார்சியா மார்க்யூசின் Gabriel Garcia Marquez வாழ்ககையை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சி மெக்சிகோவின் காசா கொலம்பியா அரங்கில் நடைபெறுகிறது.
  3. சுதந்திரமான வர்த்தகத்திற்கு அமெரிக்காவின் கதவுகள் திறந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின் நிறைவு நாளில் உரை நிகழ்த்திய டிரம்ப்,...
தேசிய செய்திகள்
  1. டெல்லியில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய்க்குச் சிறப்பு மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் மேத்யூ வர்க்கீசைத் தன் வாழ்வின் கதாநாயகனாக பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
  2. கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 30விழுக்காடு வரை ஊதிய உயர்வு வழங்கவும் ஒன்றுவிட்ட சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
  3. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ரயில் நிலையத்தில், இந்தியாவின் பழைமை வாய்ந்த நீராவி ரயிலான fairy queen சிறப்பு ஓட்டம் நடைபெற்றது.
  4. இந்தியாவில் வளர்ந்து வரும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது
  5. இந்தியாவை போன்று பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஆதார் அட்டை முறையை செயல்படுத்த அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. உலக வரலாற்றில் முதன் முறையாக மிகப் பெரிய குடியேற்ற அனுமதியை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வெளிநாட்டவர் குடியேறுவதற்கு கனடா அரசு அனுமதி வழங்கவுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. சையது முஷ்தாக் அலி டிராபி, சூப்பர் லீக் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது
  2. ஐசிசியு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 4வது கால் இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
அறிவியல் மற்றும் தொழிநுட்பம்
  1. உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை துளையின்றி ஒளிப்படம் எடுக்கும் எந்திரத்தை கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். Project DR என்று பெயரிடப்பட்டுள்ள
  2. ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க ஸ்பெயின் விஞ்ஞானிகள் ரோபோட் (ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம்) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ஒப்பந்தங்கள்
  1. இந்தியா - கம்போடியா இடையே இன்று 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பிரதமர் மோடி, கம்போடியா பிரதமர் ஹூன்சென் பங்கேற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரங்கல்
  1. உலகின் மிகவும் வயது முதிர்ந்த மனிதக்குரங்கான விலா, 60வது வயதில் உயிரிழந்தது.
Post a Comment