Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 29th January 2018

உலக செய்திகள்
 1. அர்ஜெண்டினாவில் நடைபெற்ற வசந்தத்திருவிழாவில் இசை, நடனம் என பார்வையாளரக்ளை கவரும் அம்சங்கள் இடம் பெற்றன.
 2. சந்திரகிரகணம் மூன்று அரிய நிகழ்வுகளை கொண்டதாக அமைகிறது. நிலவு உதயத்தின் போதே முழுமையான சந்திரகிரகணம் ஏற்படும், அதாவது நிலவு பூமியின் நிழல் பகுதியில் நுழையும்போதே சூரியக் கதிர்கள் நிலவின் மீது படாமல் முழுமையாக தடுக்கப்படும். இரண்டாவது அரிய நிகழ்வாக நிலவு நீல நிறத்தில் சூப்பர் ப்ளூ மூனாக ((Super Blue’ moon)) காட்சியளிக்கும். இந்த மாதத்தில் இது இரண்டாவது முழு நிலவாகும்.
 3. அமெரிக்க பாடகரும், இசை மற்றும் நடனக் கலைஞருமான புரூனோ மார்ஸ், ஆண்டின் சிறந்த இசை ஆல்பம் உள்ளிட்ட 6 கிராமி விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார்.
 4. அமெரிக்காவில் இபி-5 விசா பெற செய்யப்படும் முதலீட்டு தொகை4 கோடியிலிருந்து ரூ.11.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
 5. கோபேங்கிங்ரேட்ஸ் நிறுவனமானது உலக அளவில் குறைந்த பொருட்செலவில் வாழ்வதற்கு வசதியுள்ள நாடுகளின் பட்டியலை(112) வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தென்கொரியா முதலிடத்தில் உள்ளது.
 6. ஜப்பானில் 534 டாலர் மின்னணு பணம் திருடப்பட்டுள்ளது. இது உலகில் மிகப் பெரிய இணைய திருட்டு ஆகும்.
தேசிய செய்திகள்
 1. குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கவந்த முப்படையினரும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சவுக்கில் நடைபெற்றது.
 2. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை சிறந்த அணிவகுப்புக்கான விருதை 6-வது முறையாக பெற்றுள்ளது.
 3. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாலை விவகாரம் குறித்து, இந்தியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
 4. நாடு முழுவதும் கல்வித்துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய குடியரசுத் தலைவர், குறைந்த செலவில் மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார்.
 5. அரசு, தொழில் உள்ளிட்டவை மீது நம்பிக்கை கொண்டோர் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது மூன்றாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. புற்றுநோய் பாதிப்பால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் உற்பத்தித்திறனில் பல நூறு கோடி டாலர்கள் அளவுக்கு பெரும் இழப்பை சந்திப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
 2. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 7 முதல்5 சதவீதம் வரை இருக்கும் எனவும், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா மீண்டும்பெறும்.
 3. விண்கலத் தயாரிப்பு முறையில் முக்கியப் பங்கு வகிக்கும் வெப்ப பூச்சு முறையில் ராஜஸ்தானைச் சேர்ந்த அறிவியலாளரின் கண்டுபிடிப்பு நாசாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 4. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்க 6 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
 5. பொருளாதார ஆய்வறிக்கை: தமிழகத்தில் ஜிஎஸ்டி பதிவு அதிகம்: மறைமுக வரி செலுத்துவோர் 50 சதவீதம் அதிகரிப்பு.
 6. அசாம் மாநிலம் நடத்தும் முதலாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு பிப்ரவரி 3ம் தேதி தொடங்குகிறது.
விளையாட்டு செய்திகள்
 1. ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட 5 அதிகம் அறியப்படாத வீரர்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.2கோடிக்கு ஏலம் எடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் என்ற மே.இ.தீவுகளைச் சேர்ந்த வீரர், இந்தியாவின் இஷான் கிஷன் (ரூ.6.2 கோடி), டார்சி ஷார்ட் (ரூ.4 கோடி), கவுதம் (ரூ.6.2 கோடி), முஜீப் ஸத்ரான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ.4 கோடி.)
 2. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற ஐசிசி யு-19 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
 3. மாங்கனூயில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியதோடு நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது.
 4. தைரோகேர் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடியின் முதல் கட்ட போட்டியில் திருச்சி காவல்துறை அணி முதலிடம் பிடித்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுப்பம்
 1. பிரிட்டனைச் சேர்ந்த மென்ஸா அமைப்பு நுண்ணறிவுத் திறன் தேர்வை நடத்தியது. இதில் பிரிட்டனின் வோகிங்ஹாம் நகரில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த மெகுல் கார்க் 162 மதிப்பெண்களுடன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
நியமனங்கள்
 1. பின்லாந்து நாட்டின் அதிபராக ‘சாலி நினிஸ்டோ’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 2. செக் குடியரசின் அதிபராக மிலோஸ் ஸீமான் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 3. வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர் ஓய்வுபெற்றுள்ள நிலையில், புதிய வெளியுறவுத்துறைச் செயலாளராக விஜய் கேசவ் கோகலே இன்று பொறுப்பேற்கிறார்.

No comments:

Post a Comment