Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 30th January 2018

உலக செய்திகள்
 1. மிகவும் ஆபத்தான 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
 2. அமெரிக்காவில் இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய கிராமி விருதுகள் அளிக்கப்பட்டன. இதில் அமெரிக்க பாப் இசைபாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமிய விருதுகளைத் தட்டிச் சென்றார்.
 3. அமெரிக்கா மீது ஒருசில மாதங்களில் அணு ஆயுத தாக்குதலை வடகொரியா நடத்தக் கூடும் என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குநர் Mike Pompeo கவலை தெரிவித்துள்ளார்.
 4. எகிப்து பாலைவனப் பகுதிகளில் ஒரு பேருந்தின் அளவிலான புதிய டைனோசர் ஒன்றின் படிமங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 5. பொலிவியாவில் உள்ள கேபிள் கார் சேவை உலகின் மிக நீண்ட தூர சேவையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
 6. பிரான்சில் பெண்களை கேலி செய்தால் € 350(ரூ.27ஆயிரம்) அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது
 7. ஓமனில் அடுத்த 6 மாதத்திற்கு ஊடகம், ஐடி, மார்கெட்டிங், இன்சூரன்ஸ் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற 10 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது
 8. சீனா, உலகின் மிக உயரமான கட்டிடத்தை மலேசியாவில் கட்டி வருகிறது. இதன் உயரம் 492 மீட்டர் உயரமாகும். இக்கட்டிடத்திற்கு ‘சிக்னேச்சர் டவர்’ என பெயரிடப்பட்டுள்ளது
 9. இசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே முழுக்க, முழுக்க சூரிய சக்தியால் ஒளி வீசும் பாலம் என அறியப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
 1. தமிழகத்தின் ஊரக உள்ளாட்சிகளின் நிதித் தேவை தன்னிறைவு பெற அமைச்சர் வேலுமணி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
 2. ஆண்கள் முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்து கால்பந்து விளையாடுவதை முஸ்லிம் பெண்கள் பார்ப்பது, மதத்துக்கு விரோதமானது. அவ்வாறு பார்க்கக்கூடாது என்று தரூல் உலூம் மதகுரு ஆணையிட்டுள்ளார்.
 3. உத்தரபிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் சூரிய மின்சக்தி (சோலார்) நிலையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில கூடுதல் மின்சார வளங்கள் துறை அமைச்சர் விர்ஜேஸ் பதக் தெரிவித்தார்.
 4. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஊதியம் 200 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
 5. இந்தியாவில் வாழும் நடுத்தர வயதினரும், ஏழைகளும் 6 சதவீத அளவுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
 6. உத்திரப்பிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் சூரிய மின்சக்தி(சோலார்) நிலையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில கூடுதல் மின்சார வளங்கள் துறை அமைச்சர் ‘விர்ஜேஸ் பதக்’ தெரிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்
 1. பொருளாதார வளமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 ஆவது இடத்தில் இருப்பதாக நியூ வோர்ல்ட் வெல்த் (New World Wealth) அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள் 
 1. தனியார் நிறுவனங்களில் செக்யூரிட்டி (இரவுநேர காவல்) வேலை செய்து கொண்டே கிரிக்கெட் விளையாடி, ஐபிஎல் அணிக்கு தேர்வாகியுள்ளார் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் தார்.
 2. சென்னையில் நடைபெற்ற மெக்பரன் கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து தொடரில் பெங்களூரு அணி 1-0 என்ற கணக்கில் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது
 3. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ‘தலிமரன் ஆவின்’ 100வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த தபால் தலையை அஸ்ஸாம் மாநில ஆளுநர் ‘ஜெகதீஷ் முகி’ வெளியிட்டார்
 4. சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 47வது இடத்தில் உள்ளார்
 5. தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கி செய்திகள்
 1. கிரிப்டோகரன்ஸி எனப்படும் மெய்நிகர் பணம் வழங்குவதாக விளம்பரம் செய்த நிறுவனத்தின் இ-மெயில் தகவல்களை 'ஹேக்' செய்த கொள்ளையர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சியின் போது மின்னணு கண்காணிப்பு கருவி Strava என்ற மொபைல் செயலியை பயன்படுத்துவதை ஒழுங்குமுறைப் படுத்துவது குறித்து பெண்டகன் ஆய்வு செய்து வருகிறது.

No comments:

Post a Comment