Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 11th February 2018

  1. புதுச்சேரியில் 8 நாட்கள் நடைபெறும் அனைத்து மாநில கைவினை பொருட்களின் கண்காட்சியை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
  2. இந்திய கடற்படை தினத்தை ஒட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை வீரர்கள் நடத்திய சிம்பொனி இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
  3. இஸ்ரேலிய போர்விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தியதால் தங்களுக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
  4. பாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் மதிப்பு கடந்த 2016 - 2017 நிதியாண்டில் 20 ஆயிரத்து 339 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  5. தமிழகத்தில் 72 ஆயிரம் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதிக்குள் மடிக்கணிணிகள் வழங்கப்பட்டு நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
  6. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு சம்பா நடனக் கலைஞர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
  7. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் அமையவுள்ள முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் மோடி, துபாய் வாழ் இந்தியர்களிடையே உரை நிகழ்த்தினார்.
  8. பொலிவியாவில் பாரம்பரியமிக்க கலாச்சாரத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. யுனெஸ்கோவால் பாரம்பரியம் என அறிவிக்கப்பட்ட இந்தத் திருவிழா கடந்த 450 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது
  9. மாலத்தீவில் இந்தியாவுக்கு இருந்த முதலிடம் சீனாவுக்கு மாறி வருவதாகக் கூறப்படுகிறது. 1981ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் தடையற்ற வணிக உறவு இருந்து வருகிறது.
  10. காளஹஸ்தி கோயிலுக்கு 7 வெண்பட்டு குடைகள் – இந்து தர்மார்த்த சமிதி சார்பில் வழங்கப்படுகிறது
  11. ஆதார் எண் இல்லாத காரணத்திற்காக எந்த ஒரு குடிமகனுக்கும், எந்த ஒரு சேவையும் நிறுத்தப்படக் கூடாது என்று தனித்துவ அடையாள ஆணையம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
  12. ஏப்ரல் மாதம் முதல் வங்கி சேவைகளை வீட்டில் இருந்தே பெறுவதற்கான திட்டம் தயாராகி வருகிறது.இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி தனது சேவையை இந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தெலுங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், ஆந்திராவிற்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசு முன் வந்துள்ளது.
  13. தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் மிகவும் செலவு குறைந்தது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Post a Comment