Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 14th February 2018

உலக செய்திகள்
 1. வெளிநாடுகளுக்கான உதவிகளை அமெரிக்கா நிறுத்தக் கூடாது என வலியுறுத்தி, மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், அதிபர் ட்ரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
 2. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது 4 மாத சம்பளத்தை இந்த முறை அந்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக வழங்குகிறார்.
 3. நர்மதை ஆற்றங்கரையில் 597 அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அக்டோபர் 31ஆம் தேதி திட்டமிட்டபடி திறக்கப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
 4. ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி 3நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியாவுக்கு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி நாளை இந்தியா வருகின்றார்
 5. 1200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 6 ஆண்டுகளில் ரயில்வே பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
 1. மருத்துவச் செலவு, உயர்கல்வி போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக தொழிலாளர் காப்பீடு கணக்கை, 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முடிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய நிதியமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 2. சர்வதேச விண்வெளி மையத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியை 2025 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க நிறுவர் டொனால்ட் ட்ரிம்ப் கூறியுள்ளர்
 3. பூமிக்கு மேல் 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை தனியார் மையமாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது
 4. அமெரிக்க உளவு துறை சைபர் தாக்குதலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரஷ்ய, சீனா சவுத் கொரிய, ஈரான் உள்ளிட்ட நாடுகள்
 5. பெருமூளை வாதம் ஹெர்டிஸ்ம் உள்ளவர்கள் 40 வயது வரை UPSC தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்
 6. ரயில் பாதையில் ஏற்படும் யானைகளின் உயிரிழப்பை குறைக்க தேனீக்களின் சத்தத்தை எழுப்பும் புதிய முயற்சியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு இந்திய அரசு விதிக்கும் வரி நியாயமில்லாதது என அமெரிக்க அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 2. இந்திய ராணுவத்திற்கான40 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கிகள் வாங்க இராணுவ கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
 3. சிட்டி பேங்க், வாங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் பீடகாய்னை வர்த்தகம் செய்ய தடை விதித்துள்ளது.
 4. திரும்ப வராத கடனை திரும்ப பெற ரிசெர்வ் வங்கி புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் 6 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
 5. அபுதாபியில் நேரடி முதலீட்டில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் இந்திய முதலிடத்தில் உள்ளது.
 2. ஆசிய தடகள போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இ. லஷ்மணன் 5000m ஓட்டப்பந்தையத்தில் தாங்க பதக்கம் வென்றார்
 3. இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த ரோஹித் ஷர்மா அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்
 4. இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீரரான தீபா கார்மேக்கர் காமன் வெல்த் போட்டியில் இருந்து விலகினார்
 5. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில், இந்திய அணி முதலிடம் பிடித்தது.
 6. தென்கொரியாவின் Pyeongchang-ல் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக்கின் பனிச்சறுக்கு போட்டியில் 17 வயதேயான அமெரிக்க வீராங்கனை Chole Kim தங்கப்பதக்கம் வென்றார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. நானோ மீட்டர் ரோபோக்கள் மூலம் புற்றுநோய் கட்டியை குணப்படுத்தும் வழிமுறையை பாலூட்டிகள் மூலம் மருத்துவர்கள் முதன்முறையாக சோதனை செய்துள்ளனர்.
 2. பாகிஸ்தான் புதியவகை அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 3. சாதாரண மொபைல் போனிலும் ஜிபிஎஸ் மற்றும் பாதுகாப்பு பட்டனை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விருதுகள்
 1. உலக தொல்காப்பிய மன்ற செயலாளரான மு. இளங்கோவனுக்கு தொல்காப்பிய காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இரங்கல்
 1. பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னணி பத்திரிகையாளரான முசாபர் ஹீசைன் காலமானார்.

No comments:

Post a Comment