Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 19th February 2018

  1. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, 2-வது விண்வெளி நோக்காய்வுக் கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டு வருகிறது.
  2. அதிவேக இணைய சேவை வழங்குவதற்கான செயற்கைக் கோள் சோதனை முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கையில் எடுத்தது.
  3. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின்படி பாடநூல்கள் அச்சிடும் பணி ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
  4. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார்.
  5. three billboards திரைப்படம் BAFTA பிரிட்டன் திரைப்பட விழாவில் சிறந்த படம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றது.
  6. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் போர் விமானங்களை மிஞ்சும் வகையில் தான் தயாரித்துள்ள ஜே 20 என்ற போர் விமானத்தின் வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது.
  7. சர்வதேச உணவுத் திருவிழா டெல்லியில் நடைபெற்றது.உலகின் பல்வேறு நாடுகள்- நகரங்களில் ருசிக்கக்கூடிய உணவு வகைகளை ஒரே இடத்தில் உண்ணும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  8. நவி மும்பை பகுதியில் புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  9. மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பை-புனே இடையே ஹைப்பர் லூப் போக்குவரத்து சேவையை தொடங்குவதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த Virgin Group நிறுவனத்துடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.