Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 1st February 2018

உலக செய்திகள்
  1. ஜப்பானியர்கள் வடிவமைத்த டிராவல் ஃப்ராக் ((Travel Frog)) என்ற மொமைல் கேம் அப்ளிகேஷன், சீனாவில் மட்டும் ஒரே நாளில் 30 லட்சம் பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
  2. இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுக்கு வானமே எல்லை என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
  3. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைட் பிஸிக்ஸ் ஆய்வகத்துக்கு கடந்த 20-ம் தேதி ஒரு தகவல் விண்வெளியிலிருந்து கிடைத்தது. அந்த சிக்னலானது நாசா அனுப்பிய 166-வது செயற்கைக்கோளிலிருந்து கிடைத்தது என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. ரயில்வே மேம்பாட்டிற்காக ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.
  2. சென்னை - பெங்களூர் நகரங்களிடையே பாதுகாப்புத்துறை சார்ந்த தொடர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப் படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. விவசாயிகளுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் உதவும் வகையிலும், வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  4. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா விரைவில் 5-வது இடத்திற்கு முன்னேறும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்
  1. பட்ஜெட்டில் மின்னணு பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் உள்ளிட்டவற்றின் விலை உயரும்.
  2. உள்நாட்டில் ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் செல்போன்கள் மற்றும் அவற்றின் உபகரணங்களுக்கான இறக்குமதி சுங்க வரி 15 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் ஐ போன்கள், சாம்சங், Xiomi, Oppo உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான விலை உயரும்.
  3. ஸ்மார்ட் வாட்சுகள், அறைகலன்கள், படுக்கை விரிப்புகள், விளக்குகளின் விலையும் உயர உள்ளது.
  4. சைக்கிள்கள் பைக்குகளுக்கான பேனல்கள், விளையாட்டு உபகரணங்கள் வீடியோகேம்களின் விலையும் உயரும்.
  5. சிகரெட்டுகள், லைட்டர்கள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றின் விலையும் உயரும்.
  6. முந்திரி பருப்புகள், சோலார் தகடுகள் தயாரிக்கப்படும் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றின் விலை குறையும்.
  7. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான விலக்கு திரும்பப் பெறப்படுகிறது.
  8. சிறு வணிகர்களுக்காக முத்ரா திட்டத்தின் கீழ் 3லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  9. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடனை 37விழுக்காடு அதிகரிக்க உள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
  10. புதிதாகப் பணியில் சேரும் பெண் தொழிலாளர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான தொழிலாளரின் பங்கான 12விழுக்காட்டுத் தொகையை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  11. பெண்களுக்கு வருங்கால வைப்புநிதிக்காக ஊதியத்தில் பிடிக்கும் தொகையை 12விழுக்காட்டில் இருந்து 8விழுக்காடாகக் குறைக்கும் வகையில் வருங்கால வைப்புநிதிச் சட்டம் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  12. பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
  13. மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்காக மொத்தம் 46ஆயிரத்து 700கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  14. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக 7ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  15. கால்நடைப் பராமரிப்பு, பால்பண்ணை, மீன்வளம் ஆகியவற்றுக்காக மூவாயிரத்து நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  16. உரத்துறைக்கு 70ஆயிரத்து 125கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  17. உணவு மற்றும் பொதுவழங்கல் துறைக்கு ஒரு லட்சத்து 74ஆயிரத்து 159கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  18. சுற்றுச்சூழல் காடுகள், பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளுக்கு மொத்தம் 2675கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  19. புதுச்சேரி மாநிலத்துக்கு 1476கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  20. தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறைக்கு ஏழாயிரத்து எழுநூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  21. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கு ஆயிரத்து எழுபது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  22. 2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  23. பாதுகாப்புத்துறையில் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயும், ஆயுதக் கொள்முதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு 93 ஆயிரத்து 982 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
  24. பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பலன்களுக்கான தொகை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 853 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டுள்ளது.
  25. ஒட்டு மொத்தமாக பாதுகாப்புத்துறையில் மட்டும், 4 லட்சத்து 4 ஆயிரத்து 364 கோடியே 71 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  26. 250கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட பெருநிறுவனங்களுக்கான வருமான வரி 25விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  27. ஆண்டுக்கு நூறு கோடி சேவைகளைக் கையாளும் வகையில் இந்திய விமான நிலையங்களின் திறன் உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
  28. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு மேலும்1 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், 2022 ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கு எட்டப்படும்.
  29. பணியின்போது வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் இழப்பீட்டை மகாராஷ்டிர மாநில அரசு 20லட்ச ரூபாயில் இருந்து 25லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது.
  30. தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காக 56ஆயிரத்து 619கோடி ரூபாயும், பழங்குடியினர் நலனுக்காக 39ஆயிரத்து 135கோடி ரூபாயும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
  31. வேளாண் கடன் வரம்பு ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு
  32. நாடு முழுவதும் 8 கோடி கிராமப் பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு.
  33. 8 கோடியே 20 லட்சம் பேர் நாடு முழுவதும் வருமான வரி செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். 85 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், வருமான வரி மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
  34. மாத ஊதியதாரர்கள் 1 கோடியே 89 லட்சம் பேர் 2016-17 நிதி ஆண்டில் வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  35. குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ. 5லட்சமாக உயர்த்தப்படும்
  36. 2019-ஆம் ஆண்டுக்குள் 18, ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்படும்
  37. 700 எஞ்சின்கள், 5 ஆயிரத்து 160 ரயில்பெட்டிகள், 12 ஆயிரம் சரக்குப் பெட்டிகள் வாங்கப்படும்
  38. 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 150 கிலோமீட்டர் தூரத்திற்கு கூடுதலாக புறநகர் ரயில்வே நெட்ஒர்க் ஏற்படுத்தப்படும்
  39. மும்பை புறநகர் ரயில்வே மேம்பாட்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், பெங்களூருவில் 160 கிலோமீட்டர் தூர புறநகர் ரயில் திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
  40. 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  41. ஒருங்கிணைந்த பி.எட்., வகுப்பு, ரூ.1 லட்சம் கோடியில் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள்
  42. காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை, நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக் கல்லூரிகள்
  43. வேலைவாய்ப்புக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு
  44. 4 கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு
விளையாட்டு செய்திகள்
  1. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
  2. தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் 8வது முறையாக சாம்பியன் பட்டன் வென்றார் .

Post a Comment