Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 20th February 2018

உலக செய்திகள்
 1. உத்தரப்பிரதேசத்தில் புதன் கிழமை தொடங்க உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு சுமார் 900 தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 2. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் சோதனையின் போது விண்வெளியில் விடப்பட்ட கார், பூமியின் மீது மோதுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 3. பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் வருடாந்திர மலர்த்திருவிழாவில், மக்கள் ஒருவருக்கொருவர் மலர்கொத்துக்களை வீசி எறிந்து மகிழ்ந்தனர்.
 4. குழந்தை பிறப்புக்கு பாகிஸ்தான் அபாயகரமான நாடு என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது. இந்த வரிசையில் பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்த இடங்களை ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகியவை பிடித்துள்ளன.
 5. அதிவேக இணைய சேவை வழங்குவதற்கான செயற்கைக் கோள் சோதனை முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கையில் எடுத்தது.
 6. பிரான்சில் கடற்படை வீரர்களைக் கொண்டாடும்விதமாக நடத்தப்படும் திருவிழாவில், தண்ணீரிலிருந்து கரைக்கு பூக்களை வீசும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 7. தென் கொரியாவில் அமைக்கப்பட்ட உலகின் மிகவும் இருண்ட கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டது.
 8. பாகிஸ்தான் அரசு சீன மொழியான மாண்டரின் மொழியை ஆட்சி மொழியாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
இந்திய செய்திகள்
 1. எளிதாக தொழில் தொடங்குதல் மற்றும் வர்த்தகத்தைப் பொருத்தவரை சீனாவைக் காட்டிலும் இந்தியா முன்னணியில் இருப்பதாக அமெரிக்க அதிபரின் மகனான டிரம்ப் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
 2. மும்பையில் வீட்டின் மாடியில் வைத்து விமானத்தை வடிவமைத்த அமோல் யாதவ் என்பவருக்கு 157 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்த மஹாராஷ்டிரா மாநில அரசு அவருடன் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
 3. சந்திராயன்-2 திட்டத்திற்கு ஆகும் செலவு, இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) என்ற ஹாலிவுட் அறிவியல் கற்பனை படம் எடுத்ததற்கு ஆன செலவைவிட குறைவு
 4. இந்தியா மத்திய தூர அக்னி 2 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் ஏவுவாகனம் ஒன்றில் இருந்து அக்னி 2 ஏவுகணை ஏவப்பட்டது
 5. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிறக்கும் 6 லட்சம் குழந்தைகள் 28 நாட்களுக்குள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
 6. குஜராத்தில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் குஜராத்தி கட்டாயப்படமாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஜஸ்பிரீத் பூம்ரா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
 2. தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்கில் 11 தங்கங்கள் உள்ளிட்ட 28 பதக்கங்களைக் குவித்து நார்வே முதலிடம் பிடித்துள்ளது. ஜெர்மனி வீரர்கள் 10 தங்கங்களுடன் மொத்தம் 20 பதக்கங்களை வென்றிருந்தனர்.
 3. ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ-2017 விருதுகளில் சிறந்த பேட்ஸ்மேன்கான விருதினை ஹர்மான்ப்ரிதிப் கெளர்ரூம் டி20 பந்துவீச்சாளருக்கான விருதினை யுவிந்திர சாஹல்லும் சிறந்த அறிமுக வீரருக்கான விருதினை குல்தீப் யாதவ்வும் வென்றனர்
 4. டி20 போட்டியில் பாதிக்க கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த விக்கெட் கீப்பரான எம். எஸ் டோனி முதலிடத்தில் உள்ளார்
 5. நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கெவின் அண்ட்ராஸ்ன் சம்பையன் படத்தை வென்றார்
வர்த்தக செய்திகள்
 1. ரிலையன்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மஹாராஷ்டிராவில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தொழில் நகரம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
 2. கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ6 லட்சம் கோடியை நிதியாக அளித்துள்ளது
 3. இணையதளங்கள் வைத்திருப்போர் தங்கள் தளத்தில் விளம்பரங்களை வைத்துக்கொள்ள கூகுள் நிறுவனம் அட்சென்ஸ் எனும் சேவையை தமிழ் மொழியில் வைத்துக்கொள்ள புதிய வழிமுறையை கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
அறிவியல் மற்றும் தொழிநுட்பம்
 1. அமெரிக்காவின் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஸ்டெம் விருதுக்கு இந்திய வாசவளியை சேர்ந்த அருண் ஜெ. சன்யால் மற்றும் பார்த்திக் நாயுடு ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
 2. சட்டிஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் மூன்று அரிசி வகைகளான கத்வான், மகராஜி மற்றும் லைசா ஆகிய அரிசிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
முக்கிய தினங்கள்
 1. பிப்ரவரி 20 - உலக சமூக நீதி தினம்.

No comments:

Post a Comment