Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 22nd February 2018

உலக செய்திகள்
 1. ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 81ஆம் இடத்தில் உள்ளது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் என்கிற அமைப்பு ஊழல் குறைவாக உள்ளதை அடிப்படையாகக் கொண்டு நாடுகளின் தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. பின்லாந்து மூன்றாமிடத்திலும், நார்வே நான்காமிடத்திலும் உள்ளன. சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், சுவீடன், கனடா, லக்சம்பர்க், நெதர்லாந்து ஆகியவை அதற்கடுத்த இடங்களில் வரிசையாக உள்ளன.
 2. போர் விமானத்தை தன்னந்தனியாக இயக்கி, பெண் விமானி சாதனைப் படைத்துள்ளார். குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமானப்படை தளத்தில், ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட எம்.ஐ.ஜி – 21 ரக போர் விமானத்தை அவானி சதுர்வேதி தன்னந்தனியாக ஓட்டினார்.
 3. புந்தேல்கண்ட் பகுதியில் பாதுகாப்பு தொழில்துறை மண்டலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். இதன்மூலம்5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 4. அயோத்தியில் உள்ள ரயில் நிலையத்தை ராமர் கோயிலைப் போல மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்
 5. பாதி தானியங்கி துப்பாக்கியை, முழு தானியங்கி துப்பாக்கியாக மாற்ற பயன்படுத்தப்படும் ‘பம்ப் ஸ்டாக்ஸ்’ என்ற உதிரி பாகத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய செய்திகள்
 1. இளம்பெண்கள் அச்சமின்றி உலகை எதிர்கொள்ள வேண்டும் என இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமரின் மனைவி சோபி கிரிகோரி தெரிவித்துள்ளார்.
 2. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 3. தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.
 4. கேரளாவில் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கைக்கு நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 5. இந்தியா மட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் தனது நாடு என்றும் ஆதரவளிக்காது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
விளையாட்டு செய்திகள்
 1. தென்கொரியாவின் பியாங்சங்கில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்கில் அரைவளைய பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீரர் David Wise தங்கப்பதக்கம் வென்றார்.
 2. இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது
 3. தென்கொரியாவின் பியாங்சங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான அல்பைன் பனிச்சறுக்கு பிரிவில் இத்தாலியின் சோபியா கோகியா தங்கப் பதக்கம் வென்றார்
 4. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய அணி பி.வி.சிந்து, சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரது தலைமையில் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
 1. கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஏர்செல் நிறுவனத்தின் 5000 ஊழியர்கள் வேலையிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஏர்சல் தொலைத்தொடர்பு கோபுரங்களும் மூடப்படவுள்ளன.
 2. ஜப்பானைச் சேர்ந்த தோஷிபா நிறுவனத்தின் துணை நிறுவனமான தோஷிபா கல்ஃப் எஃப் இசட் இ,தோஷிபா லைஃப் ஸ்டைல் எலக்ட்ரானிக்ஸ் உடன் இணைந்து ஆடியோ சாதனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
 3. தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவர்களின் ஒப்புதலோடு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் ஐசியூ அட் ஹோம் திட்டத்தை சென்னையில் பிலிப்ஸ் ஹெல்த்கேர் அட் ஹோம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
இரங்கல்
 1. அமெரிக்காவின் மகத்தான கிறித்துவ மதபோதகர் பில்லி கிரஹாம் காலமானார்

No comments:

Post a Comment